இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

#Corona Virus #Covid 19 #India
Reha
3 years ago
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா தினசரி பாதிப்பு 8,865 ஆக குறைந்தது. ஆனால் நேற்று 24 மணி நேரத்தில் 10,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.  (இதில் 6,849 பேர் கேரள மாநிலத்தினர் ஆவார்கள்).

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,78,517 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 470 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,64,623 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,242 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,85,132 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.28 % ஆக உள்ளது.  

மேலும் கடந்த 527 நாட்களில் குறைவான பதிவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,28,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 114.46  கோடி பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,44,739 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,32,505 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 62,82,48,841 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!