தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி தகவல்
Keerthi
3 years ago
வெளிநாடுகளில் இருந்து நடப்பு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டாலராக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமமாகும்.
அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைனஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.