உலகப் போரில் ஈடுபட்ட முதல் இலங்கை விமானி.....

#history #SriLanka
உலகப் போரில் ஈடுபட்ட முதல் இலங்கை விமானி.....

உலகளாவிய ரீதியாக ஈழத்தமிழர்கள் பரந்து வாழ்வது மட்டுமல்லாமல் பல்துறையிலும் புகுந்து விழையாடுகிறார்கள். அவ்வகையில் விமான ஓட்டிகளாக நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். அது ஒருபுறம் இருக்க, ஒரு வியக்கும் செய்தியாக உலகப்போரில் விமான ஓட்டியாக ஒரு ஈழ தமிழர் விமானம் ஓட்டியிருக்கிறாரென்றால் நம்புவீர்களா? 

ஆம்...

இரண்டாம் உலக போரில் பிரிட்டிஸ் விமான படையில் பணியாற்றிய முதல் ஈழத்தமிழன் இவரே கப்டன் செல்லையா (இவரால் ஈழ தமிழர்கள்நாம் பெருமை கொள்கிறோம்) இவர் பற்றிய ஓர் ஆய்வு

ஈழ தமிழன் கனகசபாபதியின்100 வது பிறந்தநாளை திருகோணமலையில் உள்ள தனது ‘ஹோட்டலில் அண்மையில் கொண்டாடினார்.

பிரிடிஷ் விமான படையில் பணியாற்றிய முதல் ஈழதமிழன் என்ற பெருமை இவருக்குண்டு .இவர்  ஆனந்தா கல்லூரியில், கல்வி பயின்ற பின்னர் யாழ் இந்துகல்லூரியில் 1941 ஆண்டு பிரிட்டிஸ் விமான படைக்கு 18 பேர் தெரிவு செய்யபட்ட போது தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் பயிற்ச்சிக்காக லண்டனுக்கு  அனுப்பி வைக்கபட்டனர். பின்னர் மேலதிக பயிற்ச்சிக்காக கனடாவுக்கு அனுப்பி வைக்கபட்டபோது. அதில் இருந்த ஒரே ஒரு தமிழன் இவர் மட்டுமே. அந்த நேரம் விமான பயிற்சியின் போது யாருமே பெறாத புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருந்தார்.

இரண்டாம் உலக போரின் போது  இவர்  ஓட்டிய விமானம் பல தாக்குதல்களுக்காக பயன்படுத்தபட்டது. ஜேர்மனிய  நீர்மூழ்கி கப்பல் மீது இவர் விமானத்தில் இருந்தே குண்டு வீசபட்டதாக இவர்  தெரிவித்தார்.

போர் முடிந்ததும் இங்கிலாந்தின் கரையோர பணிகளுக்காக  அமர்த்தபட்டார். விமானபடையில் பணியாற்றியமைக்காக 1944 ஆண்டு  இவருக்கு பதக்கம் அணிவிக்கபட்டது. பின்னர் 27 வருடங்கள் ஏயார் இந்தியாவில் பணியாற்றினார்.

பின்னர் தனது இரண்டு மகன்களுக்கும் பயிற்சி கொடுக்கபட்டு கப்டன்களாக சிங்கபூர் எயார்லின்சில் இணைத்து விட்டு மகளின் பெயரில் திருகோணமலை நிலா வெளியில் புலூரினா என்ற பெயரில் கோட்டல் நடத்தினார்.

சுனாமியால் கோட்டல் பாதிக்கபட்டதன் பின்னர்  இப்போது அதன் பெயரை பாம்பீச் கோட்டல் என பெயரை மாற்றினார். இவர் ஓட்டாத விமானங்களே இல்லை என கூறுகிறார். 20வருடங்கள் அவுஸ்லியாவில் இருந்து விட்டு மீண்டும் தனது தாய் நாட்டுக்கு வந்துள்ளார்.

இன்றும் தன்னால் எவ்வகை விமானங்களும் ஓட்டமுடியும் எனகூறுகிறார். இந்த வயசிலும் இப்போது கார் ஓட்டிவருகிறார்.......