வாட்சாப் செயலியில் ஆடியோ மெசேஜ்களை வேகமாக கேட்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாட்சாப் நிறுவனம்.

Reha
2 years ago
வாட்சாப் செயலியில் ஆடியோ மெசேஜ்களை வேகமாக கேட்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாட்சாப் நிறுவனம்.

வாட்சாப் செயலியில் வாய்ஸ் நோட்களை வேகமாக கேட்கும் அம்சத்தைப் போல, ஆடியோ மெசேஜ்களுக்கும் அதே அம்சத்தை அறிமுகப்படுத்தப் பணியாற்றி வருகிறது வாட்சாப் நிறுவனம்.

தற்போது ஆப்பிள் ஐ ஓ.எஸ்களில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்தப் புதிய அம்சத்தின் மூலம் வாட்சாப் செயலியில் ஆடியோ மெசேஜ்களை 1.5, 2 ஆகிய அளவீடுகளின் மடங்குகளுக்கு வேகமாகக் கேட்க முடியும். இது ஏற்கனவே வாய்ஸ் நோட்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அம்சம். 

வாட்சாப் செயலில் குரல் மூலமாகப் பதிவு செய்து அனுப்பும் மெசேஜ் வாய்ஸ் நோட் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாய்ஸ் நோட் பிறருக்குப் பகிரப்படும் போதோ அல்லது பிற ஆடியோ ஃபைல்களை அனுப்பும் போதோ, அது ஆடியோ மெசேஜ் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வாய்ஸ் நோட்டைப் பிறருக்குப் பகிரும் போது, அது இயல்பாகவே வாய்ஸ் நோட்டாக மாறி விடுகிறது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, வாட்சாப் நிறுவனம் வாய்ஸ் நோட்களின் வேகத்தைக் கூட்டும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதே சிறப்பம்சத்தைத் தற்போது ஆடியோ மெசேஜ்களுக்கு வழங்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சம் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன் செயலியான ஐ ஓ.எஸ்ஸில் சோதிக்கப்பட்டு வருவதாகவும், முதலில் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தபடியாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!