இன்றைய வேத வசனம் 29.11.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 29.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

இன்று அநேக கிறிஸ்தவர்கள் புறஜாதியார் மார்க்கத்தைப் பின்பற்றி சோரம் போகிறார்கள்.
குறிப்பாக சாதி பாகுபாடு. இந்தச் சாதி என்ற அருவருப்பு கிறிஸ்தவத்தில் இருக்கவே கூடாது. ஏனென்றால் கிறிஸ்துவுக்கு சாதி கிடையாது. கிறிஸ்தவத்தில் சாதி கிடையாது.

நம்முடைய இயேசு சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். அனைவரையும் நேசிக்கிறார். எல்லாருக்காகவும் சிலுவையில் மரித்து அனைவரையும் தன் இரத்தத்தால் கழுவி ஏற்றுக் கொண்டவர். (ஏசாயா 53:5)
உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி என்று இயேசு நமக்கு போதித்திருக்கிறார். (லூக்கா 10:27). இப்படியிருக்க, கிறிஸ்தவர்களாகிய நாம் சாதியைக் கொண்டு மற்றவரை அற்பமாக எண்ணி புறக்கணிக்கலாமா?

நம் கண்முன் இருக்கிற நம்முடைய சகோதரனை சாதியால் புறக்கணித்து விட்டு, கண்ணுக்குத் தெரியாத இறைவனை நாம் எப்படி நேசிக்க முடியும்?

எதை செய்தாலும் அன்புடன் செய்யுங்கள் என்று வேதம் கூறுகிறது. (1 கொரிந்தியர் 16:14) ஆனால், இன்று சில சபைகளில் கூட சாதிப் பாகுபாடுகள் இருப்பது வேதனை அளிக்கிறது.

யோசித்துப் பாருங்கள்! இந்த சாதியை கிறிஸ்தவம் நமக்கு போகின்றதா, அல்லது வேறு மதம் நமக்கு போதிக்கிறதா என்று.

ஆரிய மதம் தான் நம்மை இந்த ஜாதி என்று அடையாளப் படுத்தியதே தவிர கிறிஸ்தவம் அல்ல.

கிறிஸ்தவத்தில் சாதியில்லை கிறிஸ்தவர்களுக்கு சாதியில்லை கிறிஸ்து சாதியை போதிக்கவில்லை.
யோசித்துப் பாருங்கள், கிறிஸ்து காட்டிய மார்க்கத்தில் செல்கிறார்களா? அல்லது சாதிய கோட்பாடை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆரிய மதத்தை பின்பற்றுகிறார்களா?

தேவன் தாமே உங்களுடைய மனகண்களைத் திறப்பாராக.நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். (கலாத்தியர் 3:26-29)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!