6 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை - துரத்தி சென்று காப்பாத்திய வீர தாய்

Prasu
2 years ago
6 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை - துரத்தி சென்று காப்பாத்திய  வீர தாய்

பழங்குடியின பெண் ஒருவர் சிறுத்தையிடம் சிக்கிய தனது 6 வயது மகனை தனியாக போராடி பத்திரமாக மீட்டுள்ளார்.

இந்த செய்தி வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் உள்ளது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே இருக்கும் கிராமம். இந்த பூங்கா சுற்று வட்டார பகுதியில் இருக்கும் பாடி ஜிரியா கிராமத்தில் வசித்து வருபவர் கிரண் பாய்கா.

இவர் பாய்கா பழங்குடியினத்தை சேர்ந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது கணவரின் வருகையை எதிர்பார்த்து வீட்டின் வாசலில் தனது 4 குழந்தைகளுடன் காத்திருந்தார்.

அப்போது அங்கு சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளது. இதை கிரண் கவனிக்கவில்லை. கைக் குழந்தையை மடியில் வைத்திருந்தார். 6 வயது ராகுல் மற்றும் மற்ற இரு குழந்தைகளும் கிரணுடன் தந்தைக்காக காத்திருந்தனர். அப்போது தூரத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை மெதுவாக வந்தது.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் 6 வயது குழந்தை ராகுல் மீது பாய்ந்தது. அந்த குழந்தையை கவ்விக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரண், தன்னிடம் இருந்த கைக் குழந்தையை இன்னொரு குழந்தையிடம் கொடுத்துவிட்டு சிறுத்தையிடம் உள்ள ராகுலை மீட்க ஓடினார்.

இருட்டு சூழ தொடங்கிய நிலையில் புதருக்குள் இருந்த சிறுத்தையை கிரண் பார்த்துவிட்டார். அதன் கால்கள் ராகுல் மீது இருந்தன. இந்தக் காட்சியை கண்ட கிரண் சிறுத்தை மீது பாய்ந்துள்ளார். பின்னர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி குழந்தையை சிறுத்தையிடம் இருந்து மீட்டுள்ளார்.

ராகுலை தூக்கிக் கொண்டு ஓடிய போது சிறுத்தையும் துரத்தியது. அப்போது அவரை சிறுத்தை தாக்கியது. உடனே சிறுத்தையின் கால்களை பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். அதற்குள் இவரது குரல் கேட்டு கிராமத்தினர் கூடினர். உடனே சிறுத்தை ஓடி சென்று மறைந்துவிட்டது. இதையடுத்து மயக்கத்தில் இருந்த கிரணையும் ராகுலையும் கிராம மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு குழந்தையை தாயை காட்டிலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் நபர்கள் யாருமில்லை என்பதற்கு இதுதான் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!