விதவைகள் வெள்ளைச் சேலை உடுப்பதன் காரணம்...

Reha
2 years ago
விதவைகள் வெள்ளைச் சேலை உடுப்பதன் காரணம்...

முன்குறிப்பு 1 : உலகின் அத்தனை உயிர்களுக்குமான முதல் மற்றும் அடிப்படை நோக்கம் தன்னை விட மேம்பட்ட சந்ததிகளை உருவாக்குவதே!

முன்குறிப்பு 2 : தனக்கு இனி எந்த வகையிலும் ஆணின் துணை இனி இருக்கவே இருக்காது என்று தெரிந்து விட்டால், ஒரு பெண்மையின் விஸ்வரூபம் இரண்டு மூன்று ஆண்களின் ஒட்டு மொத்த பலத்தையும் விட அதிகம். 

முன்குறிப்பு 3 : முன்குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு பதிவின் சாரத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

கணவன் மனைவி இணைந்தே தன் குழந்தைகளை வளர்ப்பது மனிதகுலத்துக்கு இயல்பான ஒன்று. (இது பறவைகள் தோன்றிய காலத்திலிருந்து பரிணமிக்கப்பட்டது). குழந்தைகளை முழுவதும் வளர்ப்பதற்கு முன்பே கணவன் இறந்து விட்டால், அந்தப் பெண்ணிற்கு கணவனின் பொறுப்பும் சேர்ந்தே சுமையாகி விடுகிறது.

பெண்மை அதைச் சமாளித்துக் கொள்ளும் என்றாலும், ஆணின் இயல்பான வெள்ளாட்டுப் புத்தியைத் தடுக்க, “அடேய்ய்ய்… இவள் கைம்பெண். இவளுக்கு இரட்டைப் பொறுப்பினைத் தூக்கிச் சுமக்கும் தூயவள். இவளை அடைய நினைக்கக் கூடாது” என்ற அடையாளத்துக்காக தூய வெள்ளை ஆடையை அணியச் செய்து வந்தனர்.

இது பிராமணச் சமூகத்தில், இன்னும் கொஞ்சம் உறுதியாக, கைம்பெண்ணுக்கு மொட்டையடித்து விடும் வழக்கம் இருந்தது (மொட்டை பாப்பாத்தி, ரொட்டி சுட்டாளாம் போன்ற பாடல்களை உருவாக்கி என்று இழிவு படுத்தியது திராவிட கோமாளிகளே). இது அந்தப் பெண்ணை இழிவு படுத்தும் நோக்கில் அல்ல. பெண்களுக்கு அழகின் உச்சமான கூந்தல் இருப்பதால், அதை மழித்து விட்டால், அவள் மீது பிறருக்கு ஈர்ப்பு ஏற்படாது என்பதே ( பெண்கள் கடமையை எண்ணி கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் ஆணின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதே).

சில வட்டாரங்களில் (கிராமங்களில்) மறுமணம் என்பது இயல்பாக நடந்து கொண்டு தான் இருந்தது. அத்தகைய இடங்களில் இந்த வெள்ளைச் சேலை , மொட்டை போன்றவை வழக்கத்தில் இல்லை.
நோக்கம் சிறந்ததே! அது அந்தக் காலத்தில் சமூகக் கட்டுப்பாட்டினைக் கடை பிடித்தவர்கள், அந்தச் சேலை, மொட்டைக்குரிய மரியாதையைக் கொடுத்தே வந்தனர். இப்பொழுது, அந்த வழக்கம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. காலம், தேவையில்லாதவற்றை தானே ஒழித்து விடும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

அந்தந்த வட்டாரச் சூழலுக்குத் தேவையான வழக்கங்களை ஏற்படுத்தியும், விலக்கியும் அந்தந்த வட்டார மக்கள் தங்கள் வழக்கங்களாகக் கொண்டிருந்தனர். எங்கோ ஒரு பகுதியில் நடந்த “சதி” முறை போன்றவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு, அதன் அடிப்படைகளை ஆராயாமல் பகுத்தறிவு என்ற பெயரில் ஒட்டு மொத்த ஹிந்துக்களையும் சாடுவது அவரவர் பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. 
இப்படி ஒவ்வொன்றிற்கும் மூலாதாரம் தேடிப் பார்த்து விட்டு பகுத்தறிவு என்று மார்தட்டிக் கொள்ளுங்கள்.