காலிப்ளவர் ஒதுக்கி வைக்காதீர்கள் - சேர்த்துக்கொள்ளுங்கள்

Nila
2 years ago
காலிப்ளவர் ஒதுக்கி வைக்காதீர்கள் - சேர்த்துக்கொள்ளுங்கள்

காலிப்ளவர் சாப்பிடக்கூடாது என அநேகமானோர் அதனை ஒதுக்கியே வைக்கின்றனர். ஆனால் அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளதை நாம் கவனத்தில் கொள்வதே இல்லை.

காலிபிளவர் ஒரு பூ வகையாகும். அதிகமாக வெண்மை நிறம் கொண்ட இது, கண்ணைக் கவரும் பல வண்ணங்களில்கூட உற்பத்தியாகிறது என்பது அறிவியல் நவீனத்தின் சாதனையாகும். காலிபிளவர் கலோரி குறைந்த உணவுப் பண்டம். கொழுப்புகள் இல்லை என்பதும் போனஸ்.

100 கிராம் காலிபிளவரில் 42.5 மில்லிகிராம் `வைட்டமின் சி' இருக்கிறது. இது உடலில் அத்தியாவசியமாக சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்துப்பொருள்.

இன்டோல் 3 கார்பினோர், சல்பராபேன் போன்ற அரிய சத்துக்கள் இதில் அடங்கி உள்ளது. இவை ஆண், பெண் உயிரணு மற்றும் கருவியல் சார்ந்த தேவைகளுக்கு அத்தியாவசியமானவை. மேலும் புற்றுநோய்க்கு எதிரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இவை தவிர வைட்டமின்கள் பி5, பி6, பி1, தாது உப்புக்களான மக்னீசியம், தாமிரம், கால்சியம், பொட்டாசியம் என எண்ணிலடங்கா அத்தியாவசிய சத்துக்களும் காலிபிளவரில் அடங்கி இருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!