கரட் சாப்பிட்டால் அன்ரி ஒக்ஸிடோன்கள் அதிகரிக்கும்.

#Health
கரட் சாப்பிட்டால் அன்ரி ஒக்ஸிடோன்கள் அதிகரிக்கும்.

கண் பார்வை அதிகரிக்க:

கண் பார்வை குறைபாடு பிரச்சனை இப்போதெல்லாம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகின்றன. கண்களின் ஆரோக்கியத்தை நாம் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். பீட்டா- கரோட்டின் என்ற சத்து குறைபாட்டால் சிலருக்கு கண் மங்குதல், கண் புரை, கண்களில் நீர் வடிதல், கண் சரியாக தெரியாமல் போதல் போன்ற பிரச்சனைகள் வருகிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு பீட்டா கரோட்டின் சத்து குறைபாடு இல்லாமல் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

சருமம் பொலிவு பெற

சிலருக்கு சருமம் எப்போதும் வறட்சி அடைந்த நிலையிலையே இருக்கும். ஒரு சிலருக்கு எண்ணெய் பசை வழிவது போன்று இருக்கும். சருமம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் உடலில் வைட்டமின் ஏ சத்து குறைபாடினால் தான். உடலில் வைட்டமின் ஏ சத்து அதிகரித்து சருமம் பொலிவுடன் இருக்க தினமும் கேரட் சாப்பிடலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகரிக்க:

நமது உடலுக்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்தானது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இதன் முக்கியத்துவம் பலருக்கு தெரிவதில்லை. கேரட்டில் எண்ணி பார்க்க முடியாதளவிற்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் மிகவும் குறைவே.

மூட்டு வலி நீங்க உணவுகள்:

வயதனாலே அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனை இந்த மூட்டு வலி. மூட்டு வலி வந்துவிட்டால் நெடுந்தூரம் நடக்க முடியாது, நின்றுகொண்டு பல மணிநேரம் எந்த வேலையையும் செய்ய முடியாது, வீட்டில் மாடிப்படி ஏற மிகவும் சிரமப்படுவார்கள். மூட்டுவலி வருவதற்கான காரணம் உடலில் வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பதால் தான். மூட்டுவலி பிரச்சனை வராமல் இருக்க வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ள கேரட்டை தினமும் சாப்பிட்டு வர மூட்டு வலியிலிருந்து தப்பிக்கலாம்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க:

நமது உடலில் மிகவும் முக்கியமான பகுதி இதயம் தான். இதயத்தில் எந்த பாதிப்பும் அடையாமல் இருக்க முதலில் கொலஸ்ட்ரால் அதிகமாக சேரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரட் இதயத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதை தடுத்து நிறுத்தும். கேரட் தினமும் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இதய ரத்த செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் வலு பெறுகிறது. இதுமட்டுமல்லாமல் உடலில் பித்த சுரப்பை அதிகரிக்கச் செய்து, கொழுப்புகளை கரைத்து, இதய நரம்புகளில் கொழுப்பு படியாமல் தடுத்து, இதயம் சம்பந்தமான எந்தவித நோய்களையும் வரவிடாமல் கேரட் தடுக்கிறது.