சிறுநீரக நோயால் வரும் அபாயமும் அதைத் தடுக்க வழிகழும்.

Prasu
2 years ago
சிறுநீரக நோயால் வரும் அபாயமும் அதைத் தடுக்க வழிகழும்.

நம்முடைய சிறுநீரகங்கள் முதுகுத்தண்டின் இருபுறமும் நம் விலா எலும்புகளுக்குக் கீழே மற்றும் வயிற்றின் பின்னால் இருக்கும் உறுப்புகள். ஒவ்வொரு சிறுநீரகமும் இது சுமார் 4லிருந்து 5 அங்குல நீளம் இருக்கும்.

சிறுநீரகத்தின் வேலை 

• இரத்தத்தை வடிகட்டுவது. 
• இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவது.
• உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துவது 
• சரியான அளவில் எலக்ட்ரோலைட்டுகளை வைத்திருப்பது. 
• நம்முடைய‌ உடலில் உள்ள அனைத்து இரத்தமும் ஒரு நாளைக்கு சுமார் 40 முறை சிறுநீரகத்தின் வழியாக செல்கிறது.
• சிறுநீரகத்திற்குள் இரத்தம் வந்து, கழிவுகள் அகற்றப்பட்டு, உப்பு, நீர் மற்றும் தாதுக்கள் தேவைப்பட்டால் சரிசெய்யப்படுகின்றன. 
• வடிகட்டிய இரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்கிறது. 
• கழிவுகள் சிறுநீராக மாறுகிறது. 
• இது சிறுநீரகத்தின் இடுப்புப் பகுதியில் சேகரமாகிறது. 
• ஒரு புனல் வடிவ அமைப்பு சிறுநீர்க்குழாய் எனப்படும் குழாயை சிறுநீர்ப்பைக்கு கொண்டுசெல்கிறது.
• ஒவ்வொரு சிறுநீரகத்திலும் நெஃப்ரான்கள் எனப்படும். ஒரு மில்லியன் சிறிய வடிகட்டிகள் உள்ளன.
• சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகள் நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்கும். உடலில் ஏதாவது பிரச்சனைகள் வெளியே தெரியும் பொழுது அல்லது பரிசோதனைகள் மேற்கொள்ளும் பொழுது மட்டுமே சிறுநீரக பிரச்சனை இருப்பது தெரியும். 
 

என்னென்ன சிறுநீரக பிரச்சனைகள் நம்முடைய சிறுநீரகத்தில் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

பைலோனெப்ரிடிஸ்(Pyelonephritis) 

  • இது சிறுநீரக பெல்விஸ் தொற்று என்றும் அழைக்கப்படுகிறது.
  • பாக்டீரியா தொற்று சிறுநீரகத்தை பாதிப்பதால் இது ஏற்படுகிறது. இது பொதுவாக முதுகுவலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். 
  • சிகிச்சை அளிக்காமல் இருக்கும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றிலிருந்து பாக்டீரியா பரவுவது பைலோனெப்ரிடிஸுக்கு மிகவும் பொதுவான காரணமாகும்.

குளோமெருலோனெப்ரிடிஸ்(Glomerulonephritis) 

  • அதிகப்படியான நோயெதிர்ப்பு அமைப்பு சிறுநீரகத்தைத் தாக்கி வீக்கம் மற்றும் சில சேதங்களை ஏற்படுத்துவதால் இந்த நோய் ஏற்படுகிறது. 
  • சிறுநீரில் இரத்தம் மற்றும் புரதம் சேர்ந்து வெளியேறுவது குளோமெருலோனெப்ரிடிஸின் பொதுவான பிரச்சனைகள். 
  • தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால் இது சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்கள்(Kidney stones) நெஃப்ரோலிதியாசிஸ்.

  • சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிகங்களை ஏற்படுத்தி கற்களை உருவாக்குகின்றன. இந்த கற்கள் சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு பெரிதாக வளரும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் பொழுது தாங்கமுடியாத வலி ஏற்படும். பெரும்பாலான சிறுநீரக கற்கள் தாங்களாகவே வெளியேறிவிடுகிறது. 
  • ஆனால் சில கற்கள் மிகவும் பெரியதாக இருக்கும். இதற்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

நெஃப்ரோடிக் சிண்ட்ரோம்(Nephrotic syndrome) 

  • சிறுநீரில் அதிகளவு புரதம் வெளியேறுவதால் இது சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. 
  • கால்களில் ஏற்படும் வீக்கம் இதற்கு ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்(Polycystic kidney disease) 

  • இரு சிறுநீரகங்களிலும் பெரிய நீர்க்கட்டிகள் உருவாகி சிறுநீரகத்தின் வேலையைத் தடுக்கும்.

கடுமையான சிறுநீரக செயலிழப்பு(Acute renal failure ) 

  • உங்களுடைய சிறுநீரகங்கள் மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மோசமடைவது. நீரிழப்பு, சிறுநீர் பாதையில் அடைப்பு அல்லது சிறுநீரக பாதிப்பு கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
  • சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சைகளை மேற்கொண்டால் சரிசெய்யலாம்.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு(Chronic renal failure) 

  • மிகவும் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய உங்களுடைய சிறுநீரகத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக வேலை செய்வதை நிறுத்துவது. 
  • நீரிழிவு பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படலாம்.

இறுதி நிலை சிறுநீரக நோய்(End-stage renal disease(ESRD) 

  • சிறுநீரகத்தின் சக்தி முற்றிலுமாக குறைந்து போதல். பொதுவாக நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக இது ஏற்படும். ESRD இருப்பவர்களுக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது.

பாப்பில்லரி நெக்ரோசிஸ்(Papillary necrosis) 

  • சிறுநீரகங்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுவதால் சிறுநீரக திசுக்களின் துண்டுகள் உட்புறமாக உடைந்து சிறுநீரகத்தை அடைத்துவிடும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அதன் விளைவாக ஏற்படும் சேதம் முழு சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

 
டியாபெற்றிக் நெஃப்ரோபதி(Diabetic nephropathy) 

  • நீரிழிவு நோயினால் ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை சிறுநீரகத்தை படிப்படியாக சேதப்படுத்துகிறது. 
  • இறுதியில் நாள்பட்ட சிறுநீரக நோயை ஏற்படுத்துகிறது. சிறுநீரில் புரதம் அதாவது நெஃப்ரோடிக் சிண்ட்ரோம் கூட ஏற்படலாம்.

 
உயர் இரத்த அழுத்த நெஃப்ரோபதி(Hypertensive nephropathy)

  • உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு இறுதியில் ஏற்படலாம்.

 
சிறுநீரக புற்றுநோய்(Kidney cancer) 

  • சிறுநீரக செல் புற்றுநோயானது சிறுநீரகத்தை பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.
  • சிறுநீரக புற்றுநோய்க்கு புகைபிடித்தலும் மிகவுப் பொதுவான காரணம்.

இடைநிலை நெஃப்ரிடிஸ்(Interstitial nephritis) 

  • சிறுநீரகத்தின் உள்ளே இணைப்பு திசுக்களின் வீக்கம் காரணமாக அடிக்கடி கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. 
  • ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் மருந்து பக்க விளைவுகள் வழக்கமான காரணங்கள்.

நெஃப்ரோஜெனிக் நீரிழிவு இன்சிபிடஸ்(Nephrogenicdiabetes insipidus) 

  • சிறுநீரகங்கள் சிறுநீரைக் குவிக்கும் திறனை இழக்கின்றன. பொதுவாக ஏதாவது மருந்து எதிர்வினை காரணமாக இது ஏற்படுகிறது. 
  • இது அரிதாகவே ஆபத்தானது என்றாலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஏற்படுத்துகிறது.

ஆம்... 

சிறிநீரக நோய் வருவதர்க்கு முக்கிய காரணியாக அமைவதே எமது உடலை நாம் சரிவர கவனம் செலுத்தாததே. அதனால் எமது நீண்ட நாள் ஆயுள் கடவுளிடம் அல்ல. கடவுள் எமக்கு தந்த அரிவிலேயே அடங்கியிருக்கிறது.

சிறு நீரக நோயின் அறிகுறி எமக்குத் தெரி ந்த உடன் வைத்தியரின் ஆலோசனையின் பின்னராவது எம்மை நாம் காத்து எமது குடும்பத்துக்கு இடையூறு செய்யாமல் வாழ்வதே சிறப்பு.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!