இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா,கெட்டதா?

Reha
2 years ago
இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா,கெட்டதா?

இரவில் தூங்க செல்வதற்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

நிம்மதியான தூக்கம் :
வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனினை உற்பத்தி செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

இனிப்புக்கு மாற்று :
பலருக்கும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் இனிப்புக்களை சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட, இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.

தசைப்பிடிப்புக்கள் குறையும் :
இரவில் படுக்கும் போது உங்களுக்கு கால் பிடிப்புக்கள் ஏற்பட்டால், வாழைப்பழத்தை சாப்பிட்டு பின் தூங்குங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை ஊக்குவித்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

செரிமானத்துக்கு உதவும் :
இரவில் உணவு உட்கொண்ட பின் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உண்ட உணவுகளை எளிதில் செரிமானமடைய செய்யும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!