அரைக்கீரை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் விளைவுகள்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ஒரே கீரை அரை கீரை. சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவர்களை மிக விரைவில் தொற்று நோயானது பாதிப்படைய செய்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் உணவில் அரை கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அரை கீரை ஒரு கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.
உடல் பலம் பெற:
ஒரு சிலர் கடுமையான உடல் பாதிப்பினால் மிகவும் மெலிந்து போய் எலும்பும் தோலுமாக இருப்பார்கள். உடல் பலம் பெற மருந்து கடைகளில் விற்கும் சத்து டானிக், ஊசி ஏற்றுக்கொள்வார்கள். விலை உயர்ந்த டானிக்கை விட உடலில் அதிக பலத்தைத் தரக்கூடியது அரைக்கீரை. உடல் பலம் பெற அரைக்கீரையைத் தினமும் நெய்யுடன் சேர்த்துப் பொரியல் அல்லது கடையல் செய்துக் கொடுத்து வந்தால் பாதிப்படைந்தவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வயிற்று புண் குணமடைய:
காலையில் வேலைக்கு செல்லும் பெரும்பாலானோர் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வயிற்றில் உள்ள புண்களை சரி செய்ய அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு வரலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு உடல் பலம் கிடைக்க:
கர்ப்பிணிகள் உடலில் பலம் இழந்து இருக்கும் போது இந்த அரைக்கீரையைக் கடைந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குத் தேவையான பாலும் அதிகமாக சுரக்கும். பிரசவித்த பெண்ணுக்கு ஆகாரம் கொடுக்க ஆரம்பித்த சமயம் அரைக்கீரையையும் கடைந்து கொடுப்பது நம் நாட்டு பழக்கத்தில் ஒன்றாகும்.
காய்ச்சல் குணமாக
காய்ச்சல் பிரச்சனையை அடிக்கடி சந்திப்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த காய்ச்சல் தீர்ந்ததும் நமது உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப கிடைக்க அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.