எல்லோருக்கும் இப்படியானதொரு தாய் வேண்டும்!!!!
ஒரு தாய் தன் மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் சில விடயங்களை தன் மகனோடு பகிர்ந்து கொண்டார்,
நீங்களும் திருமணத்திற்காக காத்திருப்பரவரென்றால் அல்லது திருமண வாழ்வில் இருக்கின்றீர்களென்றால் இந்தப் பதிவை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
மகனே! எப்பொழுதுமே நீ என்னுடைய செல்லக் குழந்தை, ஆனால் உன்னுடைய திருமணத்திற்குப் பிறகு நீயொரு பொறுப்புள்ள ஆண்மகன்.
நாளைய நாள் உன்னை கவனித்துக் கொள்ள புதியதொரு சொந்தம் உருவாகும் உனக்கு எல்லா வகையிலும் அக்கறை செலுத்தி அத்தனை விடயங்களையும் பார்த்துப்பார்த்து செய்யக்கூடிய ஒரு பந்தம் உருவாகும். நிச்சயமாக அது உன்னுடைய தாயாக இருக்கும் நானாக இருக்க முடியாது.
என்னைப் போலவே உன்னை நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடிய உன்னுடைய மனைவியாகத்தான் இருப்பாள்.
ஆகவே என்னுடைய அன்பு மகனான நீ என்னை நேசிப்பதை விட உன்னுடைய மனைவியை அதிகமாக நேசிக்க வேண்டும்.
எனவே நாளைய நாள் அவளுடைய கரங்களைப் பற்றிக் கொள்ள முன் உனக்கான சில ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் என் வாழ்வில் இருந்து கூறுகிறேன்.
ஒரு நாள் எனக்கும் உன்னுடைய அப்பாவுக்கும் இடையே தகராறொன்று ஏற்பட்டது.
நாங்கள் தாறுமாறாக கத்திக் கொண்டிருந்தோம், இருவருக்குமே அதிகமான கோபம் ஏற்பட்டிருந்தது.
இறுதியாக நான் உன்னுடைய அப்பாவை அறிவில்லாத முட்டாள் என்றேன் அவர் உடனே அதிர்ச்சியடைந்தார், அவர் அமைதியடைந்து, என்னைப் பார்த்து என்ன வார்த்தை கூறினாய்? என்று கேட்டார்.
திரும்பவும் உடனே நான் அவரை முட்டாள், முட்டாள், முட்டாள், பைத்தியம் என்று அழைக்க ஆரம்பித்தேன்.
இதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தார் என்று யூகிக்க முடியுமா உன்னால்? நிச்சயமாக என்னை அடிக்க அவர் கைகளை உயர்த்தவில்லை.
மாறாக முன்வாசல் கதவை திறந்துகொண்டு எதுவுமே பேசாமல் வெளியே சென்றார்.
அவர் எதுவுமே பேசாமல் சென்ற பிறகு, நான் குற்ற உணர்ச்சியால் நிறைந்து அவதிப்பட்டேன். மறுநாள் அவரிடம் சென்று என்னை மன்னிக்கக் கெஞ்சினேன், உன்னுடைய அப்பா என்னை மன்னித்து விட்டதும் என்னால் முடிந்த அனைத்தையும் அவரின் மகிழ்ச்சிக்காக செய்தேன்.
அன்று நான் அவருக்குப் பிடித்த உணவைச் சமைத்தேன், ஆம், அவர் பருப்புக் கறியையும் வெஜிடபிள் சூப்பையும் அதிகமாக விரும்புவார்!!! தெரியுமா?
அதைத்தொடர்ந்து அந்த நாளுக்குப் பிறகு, நான் அவரை ஒருபோதும் தகாத வார்த்தைகளைக் கொண்டு பேசவில்லை. அவர் மீதான மரியாதை பத்து மடங்கு வலுவாக அதிகரித்தது.
என் அன்பு மகனே, உன்னுடைய தந்தை என்னை அடித்து என் கன்னங்களை பதம் பார்த்திருந்தால் இன்று என்னுடன் இங்கே அமர்ந்திருப்பாயா? அவரை உன் தந்தையாகக் கருதியிருப்பாயா?
நிச்சயமாக இல்லை.
எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னுடைய மனைவியை ஒருபோதும் அடிக்காதே! சில சந்தர்ப்பங்களில் அவளால் பேசப்படுகின்ற விடயங்கள் உன்னை அடிக்கத் தூண்டிவிட்டாலும் பரவாயில்லை
அவ்விடத்தை விட்டு விலகிச் செல். பின்பு அவளே உன்னுடைய வழிக்கு வருவாள். இது என்னுடைய அனுபவமே அன்றி வெறும் ஆலோசனை மாத்திரமல்ல.
எனவே அவள் உன்னை புண்படுத்தும் போதெல்லாம், இந்தக் கதையை நான் நினைத்துப் பார்.
எனவே என்னுடைய செல்ல மகனான நீ எப்போதும் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை ஒன்று உள்ளது. அதாவது உன்னுடைய மனைவிக்கு எப்பொழுதும் ஆதரவாக இரு! குறிப்பாக அவள் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவளுடன் துணை நில்!
அவளை யார் வெறுத்தாலும் நீ அவளை ஒரு ராணியாக வைத்துக்கொள்! ஏனென்றால் உன்னுடைய அப்பாவின் தந்தை என்னை விரும்பவில்லை ஆனால் அவருடைய எண்ணம் நல்ல விதமாக மாறும்வரை உன்னுடைய அப்பா என் பக்கம் எனக்கு ஆதரவாக இருந்து இரு பக்கத்தையும் சமாளித்தார்.
அதைப் போல நீயும் இருக்க முயற்சி செய்!!!
அடுத்ததாக உணவு,
ஒரு நாள் உன் தந்தை தனது நிறுவனத்தின் உரிமையாளருக்கும் நண்பர்களுக்கும் விருந்தளிக்க என்னிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு நான் தயாரானதும் தேவையான பொருட்களை வாங்கி வந்து சமைப்பதற்காக என்னிடம் உன் தந்தை கொடுத்தார்.
இறுதியாக சமைக்கப்பட்ட உணவு மேசைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். பிறகு நான் உணவில் உப்பு சேர்க்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
உன் தந்தை உணவை சுவைத்து விட்டு உடனே என்னைப் பார்த்துவிட்டு விருந்தினர்கள் பக்கம் திரும்பி, கடந்த மாதம் என் மனைவிக்கு உடலில் சில பிரச்சனைகள் இருப்பதால் சமையல் செய்யும் போது உப்பு சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக அவர்களிடம் கூறினார்.
எல்லோரும் சிரித்தனர்!
விருந்தினர்கள் அந்த சாமர்த்தியமான பதிலை புரிந்துகொண்டு அவரவர் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொண்டனர்.
விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு, அவர் எனக்கு உடல் நலமில்லை என்று பொய் சொன்னதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு என்னிடம் இனிமேல் சமைக்கும் போது சற்று கரிசனை எடுக்குமாறு அழகான முறையில் கூறினார்.
அதிலிருந்து நான் சமைக்கும் போது ஒன்றுக்கு பத்து முறை பார்த்துப் பார்த்து சமைப்பேன்.
என்னுடைய அன்பு மகனே சில நேரங்களில் உன் மனைவி தவறுதலாக சில அசௌகரியங்களை உனக்கு ஏற்படுத்தலாம். ஆனால் அவள் உண்மையிலேயே அவற்றை தெரிந்து செய்வதில்லை.
அந்த சந்தர்ப்பங்களில் அவளுடைய மனது உடைந்து விடாமல் அவளுக்காக இசைந்து கொடுங்கள்.
இப்போது இருவருக்கும் இடையேயுள்ள உடல் தேவைகள் பற்றி பேசுகிறேன்.
உடல் தேவை என்பது ஓர் அற்புதமான விஷயம். இதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவருக்கு ஒருவர் நீங்கள் தேவைப்படும்போது எப்போதும் திருப்திப்படுத்த முயற்சிப்பதாகும்.
ஏனென்றால் சில நேரங்களில் உங்களுடைய உடல் தேவைகள் அதிகமாக இருக்கலாம் அதே சமயம் மனைவியின் தேவைகள் குறைந்திருக்கலாம்.
ஆது நீ இசைந்து கொடுக்க வேண்டும்.
அதே சந்தர்ப்பத்தில் என்னுடைய வாழ்வில் இப்னால் அவள் இசைந்து கொடுப்பாள். அதேபோல் அவளுடைய தேவைகள் அதிகமாக இருக்கும்போபடியான சில விடயங்களும் நிகழ்ந்தன.
ஒரு காலத்தில் வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்து முடித்து விட்டு உறங்கும்போது மிகவும் சோர்வாகி விடும்.
ஆனால் அதே சந்தர்ப்பத்தில் உடல் தேவைகள் இருக்கும்போது அவற்றை என்னால் உரிய முறையில் நிறைவேற்ற முடியாமல் போகும்.
அந்த சந்தர்ப்பத்தில் உன்னுடைய தந்தை அதை அழகிய முறையில் புரிந்து கொண்டு நான் நிம்மதியாக தூங்கும் வரை அழகான பல நல்ல கதைகளை எனக்கு சொல்லுவார்.
ஆகவே என்னுடைய அன்பு மகனே
சில நேரங்களில், உன் மனைவியைப் படித்து புரிந்து கொள்.
மனைவியுடன் வெளியே செல்வதை வழக்கமாக்கிக் கொள். அவளுக்கான சுதந்திரத்தை வழங்கு!!!
இறுதியாக நீ என்னை அதிகமாக விரும்புகிறாய் என்று எனக்கு தெரியும். உன்னுடைய எல்லா பிரச்சினைகளையும் என்னுடன் பகிர்ந்து கொள்வாய் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் நாளையிலிருந்து எல்லா விடயங்களும் மாறு பெரும். மற்றும் வித்தியாசமாக இருக்கும்.
எனக்கு முன் உன் மனைவிதான் முதலில் உன்னுடைய பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அவளுக்கும் உனக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே அதை பகிர்ந்துகொள்ள என்னிடம் ஓடி வராதே!.
ஒரு நாள் கழித்து அவளிடம் அதைப் பற்றி பேசு. அதைப் பற்றி கலந்து ஆலோசனை செய். யாரிடமும் அவளை விட்டு கொடுக்காதே.உங்களுக்குள்ளேயே பிரச்சினைகளை முடிந்தவரை இருவருக்குள்ளுமே தீர்த்துக்கொள்.
அடுத்தது உன் மனைவியுடன் என்னை ஒவ்வொரு மாதமும் வந்து சந்திக்க தவறாதே!!! உனக்கான மகிழ்ச்சியான இல்லம் ஒன்றை நீ அமைத்துக் கொள்வாய் என்பது எனக்கு தெரியும்.
ஆனாலும் இந்தத் தாயை ஒரு போதும் நீ மறந்துவிடாதே. இறைவனின் துணை உனக்கு எப்போதும் இருக்கும். போலவே என்னுடைய பிரார்த்தனைகளும் உன்னைச் சூழ்ந்திருக்கும்.