அன்னாசிப்பழத்தில் மலச்சிக்கலை போக்கும் காரணிகள் உண்டா?

#Health #Fruits
அன்னாசிப்பழத்தில் மலச்சிக்கலை போக்கும் காரணிகள் உண்டா?

மாலைக்கண் நோயை சரி செய்ய

வைட்டமின் சி சத்து இந்த பழத்தில் அதிக அளவு உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து கண் பார்வை அதிகரிக்கவும், மாலைக்கண் நோயை சரி செய்வதற்கும் உதவுகிறது.

இரத்த அழுத்தம் உயராமல் பாதுகாக்க

அன்னாசி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் மற்றும் இரத்த அழுத்தம் உயராமல் சரியான விகிதத்தில் வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.
இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.

உடல் எடை குறைய

உடல் எடை குறைவதற்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து தேவையற்ற கொழுப்புகளை உடலில் கரைத்து உடல் எடை குறைவதற்கு பெரிதும் உதவுகிறது.

மலச்சிக்கலை சரி செய்ய – அன்னாசி பழம் நன்மைகள்

மலச்சிக்கலை சரி செய்யவும் மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கும் இந்த அன்னாசி பழம் பெரிதும் உதவுகிறது.

எலும்பு வளர்ச்சி அதிகரிக்க

எலும்பு வளர்ச்சி அடைவதற்கும் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை சரி செய்யவும் இந்த பழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பெரிதும் உதவுகிறது.

புண்களை குணப்படுத்த – அன்னாசி பழம் நன்மைகள்:

ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக அளவு அன்னாசி பழத்தில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. வைட்டமின் சி அதிக அளவு இந்த பழத்தில் இருப்பதால் புண்கள், காயங்களை விரைவில் குணமடைய செய்ய உதவுகிறது.

மூட்டு வலியை குணப்படுத்த

அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் எனும் பொருள் மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் ரத்தம் உறையாமல் இருக்கவும்  உதவுகிறது.

உடல் சோர்வு நீங்க

தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து இதில் இருப்பதால் உடல் சோர்வை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது

அன்னாசி பழம் தீமைகள்:

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரை நோயை மேலும் தீவிரமடைய செய்கிறது.
  • பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டால் அல்லது ஜூஸ் ஆக செய்து குடித்தால் வாந்தி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
  • அதிகமாக இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் பற்களில் கரை மற்றும் எனாமலை சேதமடைய செய்கிறது.
  • சிலருக்கு அலர்ஜிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க இந்த பழத்தை கொதி நீரில் கழுவி விட்டு பின்னர் உண்ணலாம்.
  • இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறிவிடுவதால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளவர்கள் இதனை சாப்பிட வேண்டாம், ஏனேனில் இவை கீல்வாதத்தை தூண்டிவிடும் வாய்ப்பு உள்ளது.
  • அசிடிட்டி இந்த பழத்தில் இருப்பதால் சிலருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் உணர்வு காணப்படும், அதனால் வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.