டிராகன் பழத்தின் நன்மைகள்.

#Health #Fruits
டிராகன் பழத்தின் நன்மைகள்.

புற்றுநொய் வராமல் தடுக்க உதவும் டிராகன் பழம்:

டிராகன் பழத்தில் கரோட்டின் Lycopene போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் புற்றுநோய்கள் உடலை தாக்காமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகள் உடலில் வளராமல் தடுக்க உதவுகிறது. புற்றுநோய் உருவாகும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி நோய் தொற்றிலிருந்து விடுபடலாம். மேலும் இதில் அதிக அளவில் விட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ப்லேட்க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் டெங்கு போன்ற காய்ச்சலிலிருந்து விடுபடுவதற்கு இந்த பழம் உதவுகிறது.
ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான இரும்புசத்து அதிக அளவு இந்த பழத்தில் உள்ளதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் சுவாசித்தலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடலில் கொண்டு சேர்க்கிறது.

இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான கோளாறுகளை தடுக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்த:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும். இது உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும் மற்றும் ஆரம்ப நிலை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்த பழம் பயனுள்ளதாக இருக்கும்.

சருமத்தை பாதுகாக்க

விட்டமின் சி அதிக அளவு இந்த பழத்தில் இருப்பதால் முகப்பரு, வயது முதிர்வை தடுக்கவும் மற்றும் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது.

கொழுப்பை குறைக்க: 

உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பு வளர்ச்சியை தடுக்கிறது. அதனால் பக்கவாதம், மாரடைப்பு, Vascular Occlusion மற்றும் Atherosclerosis போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

 உடல் எடையை குறைக்க 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு மிக சிறந்த பழமாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த டிராகன் பழத்தை சாப்பிடலாம்.

முடி வளர்ச்சி அதிகரிக்க

தலைமுடி உதிர்விற்கு இந்தப்பழம் பெரிதும் நல்லது. மேலும் முடி நன்றாக வளர்வதற்கும் மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.

எலும்பு வளர்ச்சியை அதிகரிக்க:

இந்த பழத்தில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் பற்கள் உறுதியாக இருப்பதற்கும் மற்றும் எலும்பு வலிமையாக இருப்பதற்கும், இந்தப்பழம் பயன்படுகிறது. Osteoporosis நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பழத்தில் இருக்கும் விதைகளில் புரதம், ஒமேகா 3, ஒமேகா 6 fatty acids உள்ளது. அதனால் இந்தப் பழத்தை அதன் விதைகளுடன் சாப்பிடுவது நல்லது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் சூட்டை தணிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம் இருப்பினும் மருத்துவரை அணுகிவிட்டு இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது. டிராகன் பழத்தை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!