தமிழ் நாட்டில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றிவியல் நடவடிக்கை!

#India #Tamil Nadu
தமிழ் நாட்டில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றிவியல் நடவடிக்கை!

தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரப்பு செய்பவர்களை இந்திய குற்றிவியல் சட்டத்தின் முன் நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோயில் சொத்துகளை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கோவில் நிலங்களை சட்டத்திற்கு முரணாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கெதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பவர்கள் அதற்கான சட்ட ஆவணங்களை கோவில் நிர்வாகத்தின் மூலம் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு