மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?

Nila
2 years ago
மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?

மனதை அமைதியாக வைப்பது எப்படி:

  • சிறு வயதிலிருந்தே அனைவரும் கூறுவது கெட்ட விஷயங்களை நினைக்க கூடாது, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தான், ஆனால் நாம் எதை நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ அது தான் அந்த நாள் முழுவதும் நம் மனதில் தோன்றும்.

மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி:

  • உதாரணத்திற்கு நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள் அன்றைய நாள் முழுவதும் நாம் யாருடனாவது பேசி கொண்டு தான் இருப்போம்.
  • என்னைக்காவது சாப்பிட கூடாது என்று நினைப்போமா இல்லை கண்பார்வை இருக்க கூடாது என்று நினைப்போமா பிறகு ஏன் மனதை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அதனையும் அதன் போக்கில் பரவச்செய்தாலே போதுமானது.
  • இப்பொழுது நம் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அதனை கட்டுப்படுத்துவோமா பிறகு துன்பம் வந்தால் மட்டும் ஏன் அதை கட்டுப்படுத்த வேண்டும். மனதை சரியாக இயக்க தெரிந்தாலே போதும்.

மனதை அமைதியாக வைப்பது எப்படி? மனதை கட்டுப்படுத்துவதற்கு தியானம்:

  • மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தூக்கத்தை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். தியானம் செய்வதற்கு அதிகாலை 6 மணி சிறந்தது.

மன அமைதி யோகா:

  • தியானம் செய்வதற்கு முன்னர் மனதில் தேவையற்ற எண்ணங்களை நினைக்கமாட்டேன் மற்றும் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன் என்று கூறிக்கொள்ளுங்கள். பிறகு முதுகை வளைக்காமல் நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

மனதை அமைதிபடுத்த உதவும் தியானம்:

  • பிறகு கண்ணை மூடி கொண்டு உங்கள் வயிற்றின் அடிப்பகுதியில் ஒரு விளக்கு எறிவது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்
  • பின் அந்த தீ உங்கள் உடலில் பரவுவதாக நினைத்து கொள்ளுங்கள்.
  • எவ்வளவு நேரம் உங்களால் அந்த தீயை உணரமுடியுமோ அவ்வளவு நேரம் கற்பனை செய்யுங்கள் பின் சிறிது நேரம் Rest எடுத்துவிட்டு, உங்கள் மனம் மட்டும் உடலிலிருந்து வெளியே வாருங்கள் இப்பொழுது உங்கள் மனம் ஒரு அமைதியை பெற்றிருக்கும்.

மனதை அமைதிப்படுத்தும் தியானம்:

  • மறுபடியும் அந்த ஒளியை உடல் முழுவதும் பரவவிட்டு ஒளி ஒரு மூன்று சுற்று சுற்றி வருவது போல கற்பனை செய்யுங்கள். உங்கள் மனம் எதையுமே நினைக்காமல் Empty-ஆக உணரும்.

மனதை கட்டுப்படுத்தும் வழிகள்:

  • கடைசியாக அந்த ஒளி பாதத்தில் தொடங்கி தலை முழுவதும் வெளிச்சமாக இருப்பது போல் உணருங்கள்.
  • இதனை 5 முதல் 10 நிமிடம் வரை தினமும் செய்து வர மனம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
  • இனி எந்த ஒரு விஷயங்களையும் தெளிவாகவும் குழப்பம் இல்லாமலும் செய்து முடிக்க முடியும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!