நீரிழிவு - நீரிழிவை சமாளிப்பது எப்படி ? - கேள்விகளும் பதில்களும் - பாகம் - 1

Nila
2 years ago
நீரிழிவு - நீரிழிவை சமாளிப்பது எப்படி ? - கேள்விகளும் பதில்களும் - பாகம் - 1

ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. 


1) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது?

இது நீங்கள் என்ன மருந்தை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக அல்பாக்ளுகோசிடேஸ் குறைப்பான்களைக் கட்டாயம் உணவுடன்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் உண்டு முடித்த பிறகாவது உடன் எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் அடுத்த உணவுவரை காத்திருக்கவும்.மெட்பார்மின் போன்ற மருந்துகளை 6 மணி நேரம் தாமதமாகிவிட்டால் எடுத்துக் கொள்ளவேண்டாம்.அடுத்த வேலை மருந்துகளையே எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பான மாற்றங்களுக்கு உங்கள் மருந்தாளுனர்களோயோ மருத்துவர்களையோ கேளுங்கள்.


2)நீரிழிவு மற்றும் கொலஸ்டிரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தும் ஒரு புது மருந்து இருக்கிறதா?

2005ஆம் ஆண்டில் எப்டிஏயின் ஆலோசனைக் குழு முராக்லிட்ஜார் என்னும் புது வாய்வழி மருந்தினை அங்கீகரித்துள்ளது. இம்மருந்தில் இரண்டு செயல்கள் உள்ளன. ஓன்று, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது.மற்றோன்று, கொழுப்பு அளவில் மாற்றம் செய்வது. அதாவது, டிரைகிளிசரைட் அளவைக் குறைத்து எச்டிஎல் அளவை அதிகரிக்கும். இது வகை 2 நீரிழிவிற்கு நல்லது. ஏன்னெனில் பல இதய மருத்துவர்கள் மாரடைப்பு, முளைத்தாக்கு, இதயச் செயலிழப்பு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம் என ஐயம் தெரிவிக்கிறார்கள். இவர்கள் இந்த மருந்தினைப் பற்றி மேலும் பல ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.