ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள் எவை?

Nila
2 years ago
ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்  எவை?

சர்க்கரை நோய் - இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும்.

இதற்காக என்னவெல்லாம் சாப்பிடலாம் எனப் பார்ப்போமானால்....

பாகற்காய் 
தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 


வெந்தயம் 
வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

நெல்லி 
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய்  உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.'

கறிவேப்பிலை 
இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.

கொய்யா 
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம். 

முருங்கை இலை 
முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.

பட்டை 
தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி
சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம்.

சில நேரங்களில் உடற்பயிற்சிக்கு பின்னர் ஹைபோகிளைசீமியாவின் (Hypoglycemia) அறிகுறிகளான சர்க்கரைக் குறைபாடு ஏற்படலாம். இந்த நேரங்களில் குறைந்த சர்க்கரை அளவை ஈடுகட்ட, சக்கரைக்கட்டி அல்லது மிட்டாய் சாப்பிடலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!