சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது புற்றுநோயின் அறிகுறியா?

Prasu
2 years ago
சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது புற்றுநோயின் அறிகுறியா?

தற்போது சிறுநீரக புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இது அரிதாக குழந்தைகளையும், பரம்பரை காரணங்களால் இளைஞர்களையும் பெரும்பாலும் முதியவர்களை மட்டுமே தாக்குகிறது.

சிறுநீரகத்தில் சிறிதாக பாதிப்பை உண்டு செய்தாலும் ஒட்டுமொத்த உடலின் இயக்கங்களும் பாதிக்கவே செய்யும்.

அதிலும் சிலருக்கு சில நேரங்களில் மிகச்சிறிய அளவு ரத்தம் வரக்கூடும். அதற்காக சிறுநீரில் ரத்தம் வந்தாலே அது சிறுநீரக புற்றுநோய் என்று நினைத்து விட வேண்டாம். அது சிறுநீர்ப்பை தொற்று சிறுநீரக கற்கள், சிறுநீரில் வேறு ஏதேனும் குறைபாடு இருந்தாலும் வரக்கூடும்.

அந்தவகையில் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவ்வபோது முதுகுவலி வரக்கூடியது தான். இது தசைக்கூட்டு காயம் அல்லது சிதைவால் உண்டாக கூடியது. ஆனால் அடி முதுகு வலி தீவிரம் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகும். இந்த வலியானது மந்தமாக இருக்கும். இது முதுகில் விலா எலும்புகளுக்கு கீழ் ஒரு கூர்மையான வலியை உண்டாக்கும்.

அடி வயிற்றை சுற்றி எங்கேனும் ஓரிடத்தில் ஒரு கட்டி, பக்க வாட்டில் அல்லது முதுகில் சிறுகட்டி முளைத்தால் அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது சருமத்தின் கீழ் கடினமான, தடிமனான, வீக்கம் போன்றும் உணரலாம்.

பொதுவாக தூக்கமின்மையால் வரக்கூடிய சோர்வை காட்டிலும் புற்றுநோயால் உண்டாகும் சோர்வு வேறுமாதிரியானது. ரத்த சோகை மோசமடைந்து சோர்வு, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், சருமத்தில் வெளிர் நிறத்தை உண்டாக்கும். வழக்கத்தை காட்டிலும் சோர்வாக அன்றாட பணி செய்வதே சிரமமாக இருக்கும் போது மருத்துவரை அணுகி காரணம் அறிவது நல்லது.

பொதுவாக உடல் எடை குறைப்பில் ஈடுபடாவிட்டாலும் கூட உடல் எடை குறையக்கூடும். பசியின்மை உண்டாக கூடும். சாப்பிடுவதில் ஆர்வம் இன்மையால் அதிக எடை இழப்பு உண்டாக கூடும். இதுவும் இதன் அறிகுறியாகும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!