இந்த ராசிக்குரிய பெண்கள் சிறந்த தொழில் தலைவிகளாக இருப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசி பெண்களுக்கு பிறப்பிலேயே தலைமைப் பண்புகள், திறன்கள் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். செவ்வாய் பகவானின் செல்வாக்கு காரணமாக இவர்கள் பொதுவாக தைரியமான, ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பதோடு, எந்த ஒரு அழுத்தமான சூழலையும் சமாளித்து தன் திறமையால் முன்னேறக்கூடியவர்களாக இருப்பார்கள்.
கடின உழைப்பைப் போடக்கூடிய இவர்கள் எதிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். பெரும்பாலும் மேஷ ராசி பெண்கள் மருத்துவத் துறை, அரசியல், ராணுவம் போன்றவற்றில் உயர் பதவிகளில் இருப்பதைக் காணலாம்.
கடகம்
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பெண்கள் மென்மை மற்றும் மற்றவர்களின் மீதான அக்கறை கொள்ளுதல் மூலமாக தனித்துவமாக விளங்குவார்கள். இவர்கள் மற்றவர்களுக்காக சேவை செய்யும் தொழில் அதிகம் விரும்புவார்கள்.
இவர்கள் தான் மட்டுமல்லாமல் பிறரும் முன்னேறும் வகையில் நல்ல பயனுள்ள கருத்துக்களை வழங்குவார்கள். மற்றவர்கள் எவ்வளவு அதிகாரமிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை தன் மென்மையான குணத்தால் மனதை வெல்வார்கள். ஒரு நல்ல தலைவிக்குரிய பண்புடன் இருப்பார்கள்.
சிம்மம்
நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் ஆளக்கூடிய சிம்ம ராசியினர் இயற்கையிலேயே ஆளுமைப் பண்பு நிறைந்தவர்கள்.
எந்த விஷயத்திலும் ஒரு தலைமைப்பண்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களை எளிதில் கவரக்கூடிய பேச்சு, செயல்பாடு கொண்டவர்களாகவும், தான் செய்ய நினைப்பதை, செயல்படுத்த நினைப்பதைச் செய்து முடிப்பார்கள். மற்றவர்களும் இவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
தனுசு
ஆசானாக விளங்கக்கூடிய குரு பகவான் அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் மிகவும் அறிவு, ஆற்றல் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். மிகவும் கடுமையான பணிகளைக் கூடிய இவர்களின் சிறப்பான திட்டமிடுதல் காரணமாக எளிதாக முடித்துவிடுவார்கள். எப்படி மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவது என்று இந்த ராசி பெண்களுக்கு நன்றாகத் தெரியும்.
இவர்களின் எண்ணமும், செயல்பாடும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். மற்றவர்களுடன் நல்ல புரிதல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கும்பம்
சனி பகவான் ஆளக்கூடிய கும்ப ராசியினர் மற்றவர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். அதிலும் குறிப்பாக இந்த ராசி பெண்கள் சமூகத்தில் முக்கிய நபராக இருப்பார்கள்.
மற்றவர்களுக்கு சேவைகள் செய்தல், ஏழை, எளியோர்களைக் கவனித்துக் கொள்ளுதல், அவர்களின் உரிமைகளுக்காக போராடுதல் போன்ற விஷயங்களால் மற்றவர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டு தனித்துவமாக தெரிவார்கள்.
நேர்மை மற்றும் கடின உழைப்பு நிறைந்த இந்த ராசி பெண்கள் நல்ல தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள்.