சிறுநீரகக் கல் வராது தடுக்கவல்ல உணவு வகைகள்.
கீரை
கீரையில் அதிக அளவு நன்மை இருந்தாலும் கிட்னியில் கற்களை உருவாக்க கூடிய ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கீரையை குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பீட்ரூட்:
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அல்லது கிட்னியில் கல் இருந்து அதனை குணப்படுத்தியவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்க்க வேண்டாம். ஏனெனில் பீட்ரூட்டில் ஆக்சலேட் இருப்பதால் Kidney Stone உருவாகலாம்.
நட்ஸ் வகைகள்:
அத்திப்பழம், முந்திரி, பாதாம், கடலை பருப்பு போன்ற அனைத்து வகை நட்ஸ்களிலும் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
காபீ:
Black Tea, காபீ போன்ற காபின் கலந்த திரவங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில் கற்கள் வளருவதை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஃ
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் Dark Chocolates-ஐ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Instant Cofee, தேனீர் போன்றவைகளை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
மாமிச உணவு:
கோழி கறி, மீன், ஆட்டு இறைச்சி போன்றவைகளை வாரத்தில் ஒரு நாட்கள் எடுத்து கொள்ளலாம். இறைச்சிகளில் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் அதிக அளவு மாமிச உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள்:
தக்காளி, Cauliflower, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் இந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
அதிக அளவு உப்பு, சர்க்கரை, புரதம், கால்சியம், ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.