வாழ்க்கையில் செய்யக் கூடாத விஷயங்கள்....

Keerthi
2 years ago
வாழ்க்கையில் செய்யக் கூடாத விஷயங்கள்....

1. ஒருவரைக் காதலித்துக்கொண்டு, அதுவும் தன் காதலன்/ காதலியுடன் உருகி உருகி உறவாடுவது போல இருந்து கொண்டு வேறு ஆண்களை/ பெண்களைப் பார்த்து ஆசைப்படுதல், ஏன் ஒண்டுக்கு ரெண்டு பேரைக் காதலித்தல். இது காதலா, இல்லை கன்றாவியா என்று தெரியேல்ல. தயவு செய்து இப்பிடிப்பட்ட செயலை அனைவரும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

2. லட்சக்கணக்கில் கடன் வாங்குதல். அதுவும் நெருங்கிய சொந்தக்களிட்ட ஆயிரக்கணக்கில் கூட கடன் வாங்காதீர்கள். இந்தச் செயலை மொத்தமாகத் தவிர்த்தால் உண்மையில் நல்லது.

3. ஊர்விசயத்தையும், பக்கத்து வீட்டில நடக்கிற விஷயங்களையும் பட்டிமன்றம் போல வீட்டில் இருந்து விவாதித்தல். பெண்ணாக இருக்கும் நானே சொல்லுகிறேன், பெண்கள் தான் இதில் மும்முரமாக இருப்பார்கள். இதனால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

4. கடையில் பொருட்களை வாங்கும் போது காலாவதித்திகதியைப் பார்க்காது வாங்குதல். விலை பார்க்கும் நாம் முடிவுத்திகதி பார்ப்பதில்லை. உணவுப் பொருட்களாயின் நிச்சயம் காலவதித்திகதியைப் பார்த்து வாங்க மறக்காதீர்கள்.

5. காமத்தைத் தன் கணவரை/ மனைவியைத் தவிரப் பிறரிடம் அனுபவித்தல். காதலனாக/ காதலியாக இருந்தால் கூட வேண்டாம். எல்லாவற்றுக்கும் கல்யாணமாகட்டுமே.

6. வாழ்க்கைத் துணையைத் தவறாகத் தெரிவுசெய்தல். பிடிக்காத பாடத்தைக் கூட வேறு வழியில்லையே என்று தெரிவு செய்து படியுங்கள். ஆனால் துணை தெரிவில் துளியும் பிசகி விடாதீர்கள். மொத்த வாழ்க்கையும் நாசமாகிவிடும்.

7. நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்றத்தான் போகிறீர்கள் என்றால் பிறருக்கு உங்கள் மீது நம்பிக்கையே வராத போல செயற்படுங்கள் போதும்.

8. எல்லோரையும் நம்பாதீர்கள். இந்தக்காலத்தில் அந்நியர்களைக் கூட நம்பலாம். ஆனால் சொந்தங்களை முழுவதும் நம்ப முடியாது. எங்கே பிரச்சினையில் சிக்கி சின்னா பின்னமாகப்போகிறோம் என்று காத்துக்கொண்டு கூட இருப்பார்கள். அதற்காக எங்களுக்கு உதவி செய்யக் கூட தானாக வருவார்கள். அந்த உதவி உபத்திரவமாக மாறி ஊசலாடுவது காலஞ்செல்லத் தான் தெரியவரும்.

9. பிறரைப்போல வாழ முயலக்கூடாது. சிலர் மற்றவர்கள் நடப்பது போல, சிரிப்பது போல, கதைப்பது போல ...தாமும் செய்யத் துணிகின்றனர். அது அந்த மற்றவருக்கு வடிவாக இருக்கலாம். அசாதாரணமாக நாம் முயலும் போது அசிங்கமாக இருப்பதற்கான சாத்தியம் தான் அதிகம். நாம் நாமாகவே இருந்தால் தான் நல்லது.

10. உங்கள் முக அழகைக் காட்டிப் பிறரைக் கவர முயலாதீர்கள். சாதாரணமாக இருங்கள்.

11. கணவனையோ/ மனைவியையோ தயவு செய்து யாரிடமும் விட்டுக்கொடுக்காதீர்கள். அவர்களுக்கென்று தனியிடம் கொடுங்கள்.

12. தகாத உறவு. தயவு செய்து இப்படிப்பட்ட செயல்களை யாரும் செய்யாதீர்கள். இந்த உலகில் 100 பிரச்சினைகள் இருந்தால் அதில் தகாத உறவினால் வந்த பிரச்சினைகள்தான் 80 இருக்கும்.

13. கருக்கலைப்பு வேண்டவே வேண்டாம். எத்தனையோ தம்பதிகள் குழந்தைச் செல்வமில்லாமல் தவிக்கிறார்கள். ஒரு உயிரைக் கலைக்குமளவிற்கான இரகசிய உறவுகளும் வேண்டாம்.

வாழ்க்கையில் ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்களை விடச் செய்யக்கூடாத செயல்கள் தான் இந்த உலகில் அதிகமாக இருக்கிறது அந்தச் செயல்களை உருவாக்கியதும் அவனே அவற்றால் உருக்குலைவதும் அவனே. நான் கூறிய வெறும் 13 விஷயங்களை மாத்திரம் செய்யாது தவிர்த்தால் போதாது. எவை எவையைத் தவிர்க்க வேண்டுமென தெரிந்து கொண்டு நாமே நம்மைக் கட்டுக்குள் வைத்து வாழுவேண்டும்.