இவ்வாறு கூறுபவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!

இவ்வாறு கூறுபவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!

வாக்கியம் 1: ‘

இது என்னுடைய தவறல்ல’ ஒரு விஷயத்தை தவறாக நாம் செய்து விட்டால் அதனை உடனே ஒப்புக் கொண்டு விட வேண்டும். இது என்னுடைய தவறல்ல என்று தவறை ஒப்புக் கொள்ளாமல் தப்பிக்க முயற்சி செய்யும் படியான இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது.

வாக்கியம் 2:

நான் இதை நாளை தொடங்குவேன்’ எந்த ஒரு விஷயத்தையும் முடிவு எடுத்து விட்டால் அதை அந்த நிமிடத்திலிருந்து கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும். நாளையிலிருந்து தொடங்குவேன், ஞாயிற்றுக்கிழமையில் பார்த்துக் கொள்வேன், நல்ல நாள் வரட்டும் என்று காலத்தை தட்டிக் கழித்து கொண்டே இருந்தால் உங்களால் நிச்சயம் வெற்றி பெறவே முடியாது.

வாக்கியம் 3:

‘என்னால் இதை செய்ய முடியாது’ எந்த ஒரு விஷயத்தையும் செய்து பார்க்காமல் என்னால் முடியாது என்று கூறக்கூடாது. நீங்கள் களத்தில் இறங்காமலேயே தோல்வி அடைந்து விடுவேன் என்று கூறுவதற்கு சமமான வார்த்தை இதுதான். முடியுமா? முடியாதா? என்பதை விட செய்தோமா? என்பது தான் வெற்றியாளர்களுக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொரு அனுபவமும் நமக்கு படிக்கற்களாக அமைகிறது. எனவே இந்த வார்த்தையை பயன்படுத்தினால் எதிலும் வெற்றி அடையவே முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாக்கியம் 4:

‘இது சரியில்லை, அது சரியில்லை’ எல்லாமே சரியாக அமைந்து விட்டால் நீங்கள் வெற்றி பெறுவதன் அர்த்தம் எது? ஏற்கனவே நன்றாக படிக்கும் மாணவனுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியரை விட, முட்டாள் மாணவனுக்கு புத்தி புகட்டும் ஆசிரியர் தான் சிறந்தவராக கருதப்படுகிறார். எனவே எது எப்படி இருந்தாலும் உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு செய்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். ஏதாவது குறை கூறிக் கொண்டே தட்டிக் கழிக்கக் கூடாது.

வாக்கியம் 5:

‘நேரமில்லை’ ஒரு விஷயத்தில் இறங்கிய பின்பு நேரமின்மையை ஒரு காரணமாக கூறுவது சோம்பேறித்தனமாகும். வெற்றியை நோக்கிய பயணத்தில் நேரத்தை நீங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். நேரமில்லை என்று கூறினால் வெற்றி எவ்வளவு அருகில் இருந்தாலும் உங்களை விட்டு மிக தொலைவில் சென்று விடும். 

வாக்கியம் 6

: ‘எரிச்சலாக இருக்கிறது’ ஒரு விஷயத்தில் வெற்றியை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்றால் அதில் வரும் தடைகளையும், சவால்களையும் எதிர் கொள்ள வேண்டும். அவற்றை பார்த்து எரிச்சலாக இருக்கிறது, பயமாக இருக்கிறது போன்ற வாக்கியங்களை பயன்படுத்தினால் நிச்சயம் உங்களால் வெற்றி பெற இயலாது.

வாக்கியம் 7

 ‘எனக்கு சோர்வாக இருக்கிறது’ சோர்வு, களைப்பு, பசி, தூக்கம் ஆகிய விஷயங்களை தாண்டியது தான் வெற்றி. வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் சோர்வாக இருக்கிறது என்கிற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. உங்களை நீங்களே பலவீனமாக மாற்றிக் கொண்டால் எப்படி வெற்றி அடைய முடியும்? சோர்வினை வென்று காட்டுபவர்கள், வெற்றியையும் வென்று காட்டுவார்கள். 

வாக்கியம் 8

: ‘அதிர்ஷ்டத்தால் நடந்தது’ எந்த ஒரு விஷயத்தையும் அதிர்ஷ்டம் தான் காரணம் என்று கூறக்கூடாது. அதிர்ஷ்டம் என்ற ஒன்று வெற்றியை நிர்ணயிப்பது இல்லை. அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் எதுவும் வெற்றியும் கிடையாது. உங்களுடைய சுய முயற்சி கொடுத்து நீங்கள் ஒரு விஷயத்தில் ஈடுபடும் பொழுது தான் அந்த வெற்றி உங்களுக்கு சொந்தமாகிறது.வாக்கியம் 8: ‘அதிர்ஷ்டத்தால் நடந்தது’ எந்த ஒரு விஷயத்தையும் அதிர்ஷ்டம் தான் காரணம் என்று கூறக்கூடாது. அதிர்ஷ்டம் என்ற ஒன்று வெற்றியை நிர்ணயிப்பது இல்லை. அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் எதுவும் வெற்றியும் கிடையாது. உங்களுடைய சுய முயற்சி கொடுத்து நீங்கள் ஒரு விஷயத்தில் ஈடுபடும் பொழுது தான் அந்த வெற்றி உங்களுக்கு சொந்தமாகிறது

வாக்கியம் 9:

‘இது இருந்தால் செய்வேன்’ எந்த ஒரு வெற்றியை அடையும் பொழுதும் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது. இது இருந்தால் செய்வேன், அது இருந்தால் செய்வேன் என்று கூறுவது தோல்வியாளர்கள் கூறும் மொழி ஆகும். வெற்றி பெற நினைப்பவர்களுக்கு எது இருந்தாலும், எது இல்லை என்றாலும் மனதில் நம்பிக்கை மட்டும் இருக்க வேண்டும்.

வாக்கியம் 10:

‘அது இல்லாததால் செய்ய முடியவில்லை’ மேற்கூறிய விஷயம் தான் இதுவும். ஒரு விஷயம் இல்லை என்பதற்காக பின்வாங்குவது என்பது கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் வேறொன்றை பயன்படுத்த வேண்டும். சமயோஜித புத்தி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் எது இல்லை என்றாலும் வெற்றி அடைய முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!