உடல் எடையை குறைப்பதற்கு தினமும் லெமன் காப்பி குடியுங்கள்.
#Health
Mugunthan Mugunthan
2 years ago
லெமன் காபி
- உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை மற்றும் காபி இரண்டுமே தனித்தனியாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப்பொருள்களில் ஒன்று.
- காபியுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, ஆனால் இவை கொழுப்பை குறைப்பது சற்று கடினம் தான்.
- பசி அதிகரிப்பதை குறைக்க காபியுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கலாம். இவை பசியை குறைப்பதால் உடலில் மேலும் கொழுப்புகள் சேராமல் இருக்க உதவுகின்றன.
- தலைவலியை குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
- தலைவலியை குறைப்பதற்கு லெமன் காபி உதவுவதாக கூறினாலும், காபியில் இருக்கும் காஃபின் என்னும் பொருள் தலைவலி வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
லெமன் காபி:
- காபியுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதில் சில நன்மைகள் இருந்தாலும் இவை உடல் உபாதைகளை தரலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் லெமன் காபி குடிக்க வேண்டாம்.
- எலுமிச்சை சாற்றினை பால் கலந்த காபியில் சேர்த்து குடிக்க கூடாது, ஏனெனில் பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் பால் திரிந்து விடும்.
- எலுமிச்சை சாற்றினை ப்ளாக் காபியில் சேர்த்து குடிக்க வேண்டும். ஒரு தடவைக்கு மேல் லெமன் காபியை அருந்த வேண்டாம். லெமன் காபி குடிப்பவர்கள் ஆரோக்கியமான உணவையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்வது நல்லது.
Lemon For Weight Loss in Tamil:
- உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள், கிருமிகள் சேராமல் இருப்பதற்கு எலுமிச்சை மிகவும் பயன்படுகிறது.
- பசியுணர்வை கட்டுக்குள் வைத்து கொள்வதற்கும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதற்கும் எலுமிச்சை உதவுவதால் இது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக பயன்பட்டு வருகிறது.
- Pre-Radicals ஏற்படுத்தும் சிதைவை குணப்படுத்த எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பயன்படுகிறது.
How to Take Lemon For Weight Loss in Tamil:
- காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதன்
- தொப்பையை குறைப்பதற்கு வெள்ளரிக்காய் ஜூஸுடன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
- உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை சாறு எந்த அளவிற்கு பயன்படுகிறதோ அதே அளவிற்கு மலச்சிக்கலை சரி செய்யவும், இதய நோய், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.