பழங்களில் ஏன் சிவப்பு நிற பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் தெரியுமா?

Reha
2 years ago
பழங்களில் ஏன் சிவப்பு நிற பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் தெரியுமா?

பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு உகந்தது என ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 5-9 பழங்கள் வரையாவது சாப்பிட வேண்டுமாம். ஒரே வகையான பழங்களை எடுத்துக் கொள்ளாமல் பல்வேறு வண்ணங்களில் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெவ்வேறு நிறப் பழங்களை உண்ணுவதன் மூலம் வெவ்வேறு விதமான ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம்.

அதிலும் குறிப்பாக சிவப்பு நிற பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்களான லைக்கோபீன் மற்றும் ஆந்தோசயினின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது இதய நோய்கள் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது நாம் உண்ண வேண்டிய சில சிவப்பு நிற பழங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​சிவப்பு நிற பழங்கள்
இந்த சிவப்பு நிற பழங்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்களான லைக்கோபீன் மற்றும் ஆந்தோசயினின் போன்ற பொருட்கள் பக்கவாதம், மாகுலர் சிதைவு போன்ற கண் பார்வை குறைப்பாட்டை குறைக்க உதவுகிறது. இது செல்கள் அழிவதை தடுக்க உதவுகிறது.

​ஸ்ட்ராபெர்ரி 
ஸ்ட்ராபெர்ரியில் போலேட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்களான விட்டமின் சி காணப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். ஸ்ட்ரா பெர்ரியில் உள்ள போலிக் அமிலம் குழந்தை பிறப்புக் குறைபாட்டை போக்க உதவுகிறது. எனவே ஸ்ட்ரா பெர்ரியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செர்ரி பழங்கள் 
செர்ரி பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இவற்றில் விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. இது நம்முடைய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

​தர்பூசணி 
தர்பூசணியில் 92% அளவிற்கு தண்ணீர் காணப்படுகிறது. பீட்டா கரோட்டீன், விட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில் அதிகளவில் காணப்படுகிறது. லைக்கோபீன் கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மாகுலர் சிதைவு இவற்றை போக்குகிறது. இது இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.


​மாதுளை 

மாதுளையில் பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளன. க்ரீன் டீ மற்றும் ரெட் வொயின் ஆகியவற்றை விட மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடன்கள் 3 மடங்கு அதிகம். புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்க உதவுகிறது.

​ஆப்பிள் 
ஆப்பிளில் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் விட்டமின் சி காணப்படுகிறது. இந்த இரண்டுமே நம்ம ஆரோக்கியத்திற்கும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

குறிப்பாக, ஆப்பிளில் சர்க்கரை சத்து மிகவும் குறைவு. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களும் தங்களுடைய தினசரி உணவில் ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம்.

​திராட்சை 
திராட்சையில் விட்டமின் பி, ஏ மற்றும் நிறைய நீர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்களான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. திராட்சை பழத்தோலில் உள்ள பைட்டோ கெமிக்கல் என்ற ரெஸ்வெராட்ரோல் நாள்பட்ட நோய்களில் இருந்து நம்மை காக்க உதவுகிறது.


பிளம்ஸ் 

பிளம்ஸில் ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது நாள்பட்ட நிலைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. பிளம்ஸ் கொடி முந்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சரி செய்ய முடியும். இதில் அதிக கலோரிகள், நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை காணப்படுகிறது.

இப்படி சிவப்பு நிற பழங்களை உங்களுடைய தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக உணவுப் பழக்கத்துக்குத் திரும்ப முடியும்.

மேலும் ஆரோக்கியம் தொடர்பான‌ மேலதிக தகவல்களை பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.