சபரிமலை புனித 18 ஆம் படி பூஜை: 2040 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது

#India #God
சபரிமலை புனித 18 ஆம் படி பூஜை: 2040 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் முதல் "படி பூஜை" மேளதாளம் முழங்க நடந்தது. சன்னிதானத்தின் 18ம் படி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபமேற்றி செய்யப்படும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் இந்த பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமான ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணமுள்ள இந்த படி பூஜையின் முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 60 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி ஈரோடு மண்டல பூஜை காலம் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜை காலத்தின் முதல் "படி பூஜை" சபரிமலையில் நடந்தது. 18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தி பூஜை செய்யப்படுவதால் சர்வ பாக்கியங்களும், நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக சபரிமலையின் 18 படிகளும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. 18 படிகளிலும் விளக்கேற்றி பூஜைகள் நடத்தப்பட்டன. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமை மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி படி பூஜையை நடத்தினார்.

மாலை 07.00 மணிக்கு துவங்கும் படி பூஜை தினமும் ஒரு மணி நேரம் நடத்தப்படுகிறது. படி பூஜையை தரிசிக்க ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிரணயிக்கப்பட்டுள்ள நிலையில், படி பூஜைக்கு முன்பதிவு செய்துள்ள ஐயப்ப பக்தர்கள் திரளானோர் தரிசனம் செய்தனர். படி பூஜைக்காக முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்துள்ளதாகவும் மகரவிளக்கு பூஜை காலம் முடியும் ஜனவரி 20ஆம் தேதி வரை படி பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!