யார் யார் பப்பளிப்பழத்தை உண்ணக்கூடாது தெரியுமா?.

Prabha Praneetha
2 years ago
யார் யார் பப்பளிப்பழத்தை உண்ணக்கூடாது தெரியுமா?.

பப்பாளி பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். இது இனிப்பு கொண்ட சுவை மிகுந்த பழம் மட்டுமன்றி பல நன்மைகளையும் உள்ளடக்கியது. அதாவது நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த பழம்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், நீரிழிவு நோய் ஆபத்தை குறைத்தல், புற்றுநோய் செல்களை அழித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இப்படி பல வகைகளில் பப்பாளி நன்மை அளித்தாலும் ஒரு சிலர் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


யாரெல்லாம் பப்பாளி பழத்தை சாப்பிட கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்..

பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. 
ஊட்டச்சத்து நிறைந்த ஆக்ஸிஜனேற்றியாகும். 
ஆனால் ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊட்டச்சத்தை அதிகமாக உட்கொள்வது நிலைமையை மோசமாக்கும்.
பப்பாளி சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் பப்பாளி பழத்தை தவிர்ப்பது நல்லது.
லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடக் கூடாது. 
பப்பாளியில் சிட்டினேஸ் எனப்படும் என்சைம்கள் இருப்பதால் இது ஆபத்தானது. ஏனெனில் இது உங்களுக்கு எதிர்வினையை ஏற்படுத்தலாம். 
இதனால் தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
குழந்தையின் வளர்ச்சிக்கும் கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்திற்கும் உணவு முக்கியமானது. 
ஆனால் பப்பாளி நல்லதல்ல. 
பப்பாளியில் லாடெக்ஸ் (latex) உள்ளது. இது கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டும். அதோடு கருவை ஆதரிக்கும் சவ்வை பலவீனப்படுத்தக்கூடும்

மேலும் ஆரோக்கிய குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!