ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி

Nila
2 years ago
ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி

பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய நவீனகால பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

இவ்வாறு வரும் சர்க்கரை நோய் ஒருவருக்கு உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?


•    துரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. 
•    வேறு ஏதோ பிரச்சனைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. 
•    சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். 
•    சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். 
•    இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது. 
•    சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். 
•    கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
•    நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். 
 

மேலும் ஆரோக்கிய தகவல்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்