2022 இல் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள்.
Keerthi
2 years ago
தீபாவளிப் பண்டிகையின்போது உணவுக்கு என ஒரு தனி இடம் உண்டு.
இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவை உணவு வகைகளைச் சுவைத்திடத் தோன்றும்.
ஆனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு உடல்நலக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
ஆரோக்கியமாக உண்பதற்குச் சில குறிப்புகள் இதோ...
* வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்களை வாங்கலாம்
- இனிப்பு வகைகளில் என்ன கலக்கப்படுகிறது என்பது தெரியும்.
- அதனால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறோமா என்பது நமக்குத் தெரியும்.
* இனிப்புத் தின்பண்டங்களுக்கு மாற்றாகப் பழங்கள்
- வீட்டில் செய்த இனிப்புத் தின்பண்டங்களாக இருந்தாலும் சில பழ வகைகளை உண்ணலாம்.
- திராட்சை, பெர்ரி வகைகள் நல்ல மாற்றாக இருக்கும்.
- அவை இனிப்பாக இருப்பதோடு ஆரோக்கியமானவையும்கூட.
* இயற்கை வகை இனிப்புகள்
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதில் இயற்கை வகை இனிப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.
- சில இந்தியப் பலகாரங்களை முழுக்க முழுக்க இயற்கையான இனிப்பைக் கொண்டு செய்யலாம்.
- உலர்ந்த அத்திப்பழங்கள் போன்றவை நல்ல மாற்றாக இருக்கும்.
* முற்றிலும் கோதுமை மாவு
- முற்றிலும் கோதுமை மாவைப் பயன்படுத்தலாம்.அது சத்தானது.
- உணவில் வெள்ளை மாவிற்குப் பதில் 25 விழுக்காடு கோதுமை மாவைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது.
* குறைந்த உப்பு
- முறுக்கு, சீடை போன்றவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.
- அதனால் வீட்டில் அவற்றைச் செய்யும்போது உப்பின் அளவைக் குறைக்கலாம்.
- வறுத்த, உப்பில்லாத பருப்பு வகைகளைச் சாப்பிடலாம்.
* மற்ற சில குறிப்புகள்:
- சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் சின்னங்கள் உள்ள உணவுப் பொட்டலங்களை வாங்குவது நல்லது.
- உப்பு, கொழுப்பு, சர்க்கரை குறைவான உணவு வகைகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது.
- குறைந்த அளவு சர்க்கரை உள்ள பானத்தைப் பருகலாம்
- உணவுச் சேவை வழங்குவோர் தரமான உணவு வகைகளைத் தருகிறார்களா என்று தெரிந்துகொள்வதும் சிறந்தது.
- அனைத்து உணவு வகைகளையும் அளவுடன் சாப்பிடுவது நல்லது.உணவில் சமமாகப் பழம், காய்கறிகள், பழுப்பு அரிசி, இறைச்சி முதலியவை இருப்பதும் சிறந்தது.
மேலும் ஆரோக்கியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்