புளிப்பான உணவுகளை சாப்பிடும்போது, நாம் முகம் சுளிப்பது ஏன்?
எலுமிச்சம்பழம், மாங்காய், என்று எந்தப் புளிப்பான உணவை உண்டாலும், பலர் முகத்தைச் சுளிப்பது மிக வழக்கமான ஒன்று.
அது ஏன் நடக்கிறது? பல மருத்துவப் பக்கங்களில் கொடுக்கப்பட்ட விளக்கம்...
ஒருவரின் நாவில், அரும்பு வடிவிலான சுரப்பிகள் (tastebuds), வாயில் இருக்கும் உணவுகளின் சுவையைக் கண்டறியக்கூடியவை.
- இனிப்பு
- உப்பு
- துவர்ப்பு
- கசப்பு
- புளிப்பு
- காரம்
என அறுசுவை உணவு இருப்பதைப் போலவே, நாவில் அந்தந்தப் பகுதிகளில் அந்தந்தச் சுவைகளை உணரக்கூடிய சுரப்பிகள் உள்ளன.
எச்சிலில் உருகும் உணவு அதிக அமிலம் கொண்டதாக இருந்தால், உடனடியாக முகம், சுளிக்கத் தொடங்கும்.
அத்தகைய மாற்றத்தை ஒருவரால் கட்டுப்படுத்த முடியாது. அது இயற்கையாகவே நிகழும்.
முகம் சுளிப்பது ஏன்?
வீணான பால்
பழமாகாத காய்
வீணான சோறு
போன்றவை புளிப்பாக இருக்கும். அவை உடலுக்கு ஆபத்து விளைவிக்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆபத்து இருக்கும்போது அதனை உணர்த்த முகம் தானாகவே சுளித்துக்கொள்ளும்.
ஆனால் அனைத்துப் புளிப்பான உணவுகளும் ஆபத்தானவையல்ல. அவற்றைப் பிரித்து அடையாளம் காணும் தன்மை நம் நாவில் இல்லை. இதன் காரணமாக, எந்தப் புளிப்பான உணவை உண்டாலும் முகம் சுளிக்கும்.
மேலும் ஆரோக்கியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்