இந்தியாவில் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி

Prabha Praneetha
2 years ago
இந்தியாவில் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 94 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இன்று காலை நிலைவரப்படி இந்தியா முழுவதும் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அத்தோடு, 23 மாநிலங்களில் ஒமிக்ரோன் பரவி இருப்பதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரோன் தொற்று  கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் 460 பேரும் டெல்லியில் 351 பேரும் குஜராத்தில் 136 பேரும் கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ராஜஸ்தானில் 69 பேரும் தெலுங்கானாவில் 67 பேரும் தமிழகத்தில் 117 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகாவில் 64 பேரும் அரியானாவில் 63 பேரும் ஆந்திராவில் 16 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், ஒமிக்ரோனை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்தியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!