இந்தியாவில் வேலையின்மை விகிதம் பன்மடங்கு அதிகரிப்பு - காரணம் என்ன?

Prasu
2 years ago
இந்தியாவில் வேலையின்மை விகிதம் பன்மடங்கு  அதிகரிப்பு - காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த மாதம் வேலையின்மை விகிதம் 4 மாதங்களில் இல்லாத அளவு ஆக அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அங்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.

வேலையின்மை விகிதம், நவம்பரைக் காட்டிலும், டிசம்பரில் சுமார் 8 விழுக்காடு அதிகரித்தது.

இந்தியாவில் மேலும் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன.

சமூக ஒன்றுக்கூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வேலையின்மை விகித அதிகரிப்பு, இந்தியாவின் பொருளியலுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அங்கு ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் பேர் வேலைச் சந்தையில் சேர்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 34,000பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.

மேலும் இந்தியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!