கொரோனாவால் சவாலாகும் மனநல சிகிச்சை

#Health #Covid 19
கொரோனாவால் சவாலாகும் மனநல சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பலர் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் சிலர் மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். இப்படி பாதிக்கப்படும் நபர்கள் நிமிடத்திற்கு நிமிடம் தானாக சிரிப்பது, பேசுவது, வரைமுறை இல்லாமல் உணவருந்துவது, தூக்கத்தில் நடப்பது, திடீரென்று கத்துவது போன்ற மனநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் மனநோயாளிகளை கையாளும்போது சாதாரண நோயாளிகளை விட கூடுதல் கவனம் தேவை. இது போன்ற நபர்களின் குணாதிசயங்களை மாற்ற தினசரி காலை சூரிய குளியல், தொடர்ந்து மூலிகை சாம்பிராணி தியானம், யோகா ஆகியவற்றுடன் காலை மற்றும் மாலை நேரங்களில் சத்து மாத்திரைகள் அளிக்க வேண்டும். தினசரி சூடான கஷாயம் அளிக்க வேண்டும். கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும். காப்பகங்களில் சமூக இடைவெளியுடன் அவர்களை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது ஆகும்.

மனநோயாளிகளை தனித்தன்மை அணுகுமுறையோடு அணுக வேண்டும். அப்போதுதான் அவர்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும். மனநோயாளிகளுக்கு காலை, மாலை நேரத்தில் மனதிற்கு இனிய இசை, செவிலியர்களின் கண்காணிப்பு சேவையை தொடர வேண்டும். தவிர, மனநோய் பாதிப்பில் இருந்து அவர்களை படிப்படியாக மீட்டு எடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறு தொழில்கள் குறித்து பயிற்சி அளிக்கவும் செய்யலாம். தினசரி உடல் வெப்ப பரிசோதனை மற்றும் வாரம்தோறும் மருத்துவர்கள் நோய் தொற்று குறித்து ஆலோசனை அளிக்க வேண்டும். இது போன்ற முறைகளினால் அவர்களின் மனநிலையை மாற்ற முடியும்.

மேலும் பல ஆரோக்கிய தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!