குளியலறையிலும் ஆரோக்கியம் பழகுவோம்
ஆரோக்கியமான வாழ்வை தொடர குளியலறையிலும் சில நல்ல பழக்கங்களை பயிற்சி செய்வது அவசியம். பொதுவாக நாம் செய்யும் சின்னச்சின்ன தவறுகளை பார்ப்போம்...
டூத் பிரஷ்
முதல் விஷயம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். கழிவறையும் குளியலறையும் சேர்ந்திருக்கும் வீடுகளில் டூத் பிரஷ்ஷை அங்கே வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கழிவறை பக்கத்திலேயே இருப்பதால் பிரஷ்ஷில் கிருமிகள் தொற்றும் அபாயம் அதிகம். கடுமையான இருமல் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகு உடனடியாக டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
போன் உபயோகிப்பது...
வரவேற்பரையில் இருந்த போன் இப்போது கழிவறை வரை நம்முடனேயே தொடர்கிறது. அந்த நேரத்தைக் கூட வீணாக்க விரும்பாமல் பலரும் தொலைபேசி உரையாடல்களை முடிக்கவும் குறுஞ்செய்திகளை அனுப்பவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாம் உபயோகிக்கும் போனில் தான் அதிகபட்சமாக்க் கிருமித் தொற்றுகள் உருவாகின்றன. குளியலறைக்கும் கழிவறைக்கும் போனை எடுத்துச்சென்று உபயோகிப்பதால் இந்தக் கிருமித்தொற்றுகளின் தாக்கம் மிகவும் அதிகமாகும். போனைப் பயன்படுத்தி முடித்த பிறகு வைக்கும் இடத்திலும் கிருமித் தொற்றுக்கான அபாயங்கள் காத்திருக்கும்.
அடைசல் இன்றி வைத்திருக்கவும்
குளியலறையில் தேவையான பொருட்களை மட்டுமே வைத்திருங்கள். சோப்பு, ஷாம்பூ, கிருமிநாசினிகள் போன்றவற்றை நன்றாக மூடிய நிலையில் வைக்கவும். ஒவ்வொருவருக்குமான குளியலறை பொருட் களையும் தனித்தனியே மூடி ஈரமின்றிப் பராமரிக்கவும். குளியலறைக்குத் தேவை இல்லாத எந்தப் பொருளையும் அங்கே வைக்காதீர்கள்.
டாய்லெட் சீட்
வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதன் இருக்கைப் பகுதியை மூடி வைக்கும் வசதி உண்டு. எனவே வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்கள் அதை உபயோகித்து முடித்ததும் நன்றாக ஃப்ளஷ் செய்துவிட்டு உட்காரும் பகுதியைக் கழுவிவிட்டு டாய்லெட் சீட்டை மூடி வைப்பதை மறக்காமல் பின்பற்ற வேண்டும். திறந்த நிலையில் வைப்பதால் டாய்லெட்டில் உள்ள கிருமிகள் அங்கே உள்ள மற்ற பொருட்களின் மீதும் பரவும்.
மேலும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.