ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?
இங்கு ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும். மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும் வலியைப் போக்க முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதற்கான இதர அறிகுறிகளையும் அறிவது தான்.
அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் ஒரே நாளில் மூட்டுக்களில் உள்ள வீக்கம் போய்விடும்.
வழி-1
தேவையான பொருட்கள்:
முட்டையின் மஞ்சள் கரு - 1
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட்டை மாற்ற வேண்டும். இப்படி தினமும் 5 முறை செய்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும வலி குறைந்துவிடும்.
வழி-2
தேவையான பொருட்கள்:
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வீக்கம் மற்றும் வலி உள்ள மூட்டுக்களில் தடவி, சுடுநீரில் நனைத்த துணியை மேலே போர்த்த வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி மற்றும் வீக்கம் குறையும்.
வழி-3
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து, அந்நீரில் வீக்கமுள்ள மற்றும் வலியுள்ள மூட்டுக்களை 10 நிமிடம் ஊற வையுங்கள். இறுதியில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரு வேளை மசாஜ் செய்யுங்கள்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளால் வலியும் வீக்கமும் குறையாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மேலும் ஆரோக்கியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்