மூளையை தாக்கும் கொவிட் வைரஸ்

#Health #Covid 19 #Nerves
மூளையை தாக்கும் கொவிட் வைரஸ்

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் வெளிவந்த ஆய்வுகளை காணும்போது சார்ஸ் கோவி- 2  மூளை மற்றும் நரம்புகளையும் பாதிக்கும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

* பொதுவாகவே மூளையானது தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது.ஏனெனில்  மூளையைச் சுற்றி குருதி-மூளை வேலி என்னும் தடுப்புச்சுவர் உள்ளது. ஆனால், கோவிட் வைரஸ்கள் குருதி-மூளை வேலியை வெள்ளை அணுக்களுடன் சேர்ந்து எளிதாக தாண்டும் வல்லமை பெற்றுள்ளது.

* வாசனை நுகரும் நரம்புகள்(Olfactory nerves)வழியாகவும் கோவிட் வைரஸ்கள் மூளைக்குள் சென்றடைகின்றன.

* டிரான்ஸ்-சைனாப்டிக் ஸ்பிரட்(Trans synaptic spread) உடலின் வெளிப்புறமாக இருக்கும் நரம்புகள்  மூலமாக வைரஸ்கள் உள்சென்று,ஒவ்வொரு நரம்புகளையும் ஒன்றோடொன்று இணைக்கும் ஸினாப்ஸ் (synapse)என்று சொல்லக்கூடிய ஒரு இணைப்புப் பாதை மூலமாக மூளையை தாக்கலாம்.
சார்ஸ் கோவி 2 வைரஸினால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து குறைவான தகவல்களே இதுவரை நமக்குக் கிட்டியுள்ளன.

பல்வேறு நாடுகளில் நடந்த ஆய்வுகளையும் கிடைத்த தகவல்களையும் ஒருங்கிணைத்து பார்த்ததில் தலைவலி, தலைசுற்றல், வாசனை நுகரும் திறன் குறைதல், சுவை மங்குதல், பக்கவாதம், மூளைக்காய்ச்சல், ஒருவருடைய குணாதிசயங்களில் மாறுபாடு ஏற்படுதல்,குழப்பம், கவனம் செலுத்துவதில் சிரமம்,வலிப்பு, தசை வலி ஆகிய தொந்தரவுகள் ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே, கோவிட் குறித்தஎச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். முன் எச்சரிக்கையுடன் இருந்தால் மூளையைக் காப்பாற்றலாம். அதன் மூலம் உயிரையும் காத்துக்கொள்ளலாம்!

மேலும் ஆரோக்கிய தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.