தாய்மை

Keerthi
2 years ago
தாய்மை

விழுந்த ஒரு பொருளை குனிந்து எடுக்கும் போது
புடைத்த மார்பின் முன் பகுதி தெரியுமா என்று ஏங்கும்
சில ஆண்கள் என்னை மன்னித்து விடுங்கள்...
கொஞ்சம் வேகமாக காற்று வீச சேலை விலகும் போது இடுப்பின் இதம் பார்க்கும்
சில ஆண்களும் என்னை மன்னித்து விடுங்கள்...
ஏறக்குறைய எல்லா வகையிலும்
காமம் அரங்கேறி விட்டது
இந்த உலகில் குமரிப் பெண்கள் முதல்
கொஞ்சும் குழந்தைகள் வரை
கடித்துத் தின்று குடித்துக் கொன்று ரசித்தனர்...
இதோ இந்த மார்பைக் கூட
காமம் கொண்டு பார்க்கும்
சில கண்களும் உண்டு...
உங்கள் அனைவரிடமும் ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அம்மா என்று சொல்லி நான் இதை
எழுத ஆரம்பிக்கிறேன்...
ஒரு பெண்  பெற்றோரை விட்டு
உடன் பிறந்த சகோதரர்களை விட்டு
நண்பர்கள் உற்றார் உறவினர்களை விட்டு
கணவன் தான் இனி என் வாழ்வின் மீதி
என்று வந்தப் பின்பு எவ்வளவு விட்டுக் கொடுப்புக்கள்
எவ்வளவு அனுசரிப்புக்கள் எவ்வளவு வேலைகள்...
வீட்டிப் பணிவிடை முதல்
கட்டில் பணிவிடை வரை
விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும்
சிறு புன்னகையோடு சலைக்காமல் செய்யும் ஒரு மெய்நிகர் பிறவி...
அவள் கருவுற்றால் என்றால்
ஆனந்தம் வழிந்தோடும்...
தனிமையில் தன் வயிற்றைத் தடவி
தன் குழந்தையோடு ஏதேதோ பேசி மகிழ்வாள்...
மகப்பேற்றின் போது சுகப் பிரசவம் இல்லை என்றால்
தன்னை வெட்டி குழந்தைக்கு உயிர் கொடுங்கள்
என்று சொல்லும் ஒரு விசித்திர பிறவி தான் பெண்
எத்தனையோ பெண் தெய்வங்கள் உண்டு
சக்தி
சரஸ்வதி
லட்சுமி
மீனாட்சி அம்மன்
காமாட்சி அம்மன் என்று
எந்தப் பெண் தெய்வங்களும்
தன்னை வெட்டி ஒரு குழந்தைப்
பெற்றெடுத்தால் என்றுப்
புராணங்களும் சொல்லவில்லை
இதிகாசங்களும் சொல்லவில்லை...
பூமியில் வாழும்
தெய்வங்களான பெண்கள்
மட்டுமே தன்னை வெட்டி
குழந்தையைக் காப்பாற்றுங்கள்
என்று சொல்லுகின்றார்கள்...
இதோ அம்மா தன்னைச் சிதைத்து
என்னைப் பிரசவித்தால்...
என் அம்மாவுக்கு நான் எழுதும் கவிதையில்
உங்கள் அம்மாவையும் தெய்வங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்...
நன்றி அனைத்து அம்மாக்களுக்கும், சகோதரிகளுக்கும்…
கதையின் நீதி :-
தன்னுடைய ஆடையை ஆயிரம் தடவை சரிப் பார்க்கும்  நாணம் கொண்டவள்
அந்நியர் முன் ஆடையின்றி ஒரு உயிரைப் பிரசவிக்கப் போராடுகிறாள் பெண்…
பிரசவம் ..

மேலும் வாழ்வியல் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.