ஞாபக சக்தியை படிப்படியாக இழக்கும் ஆபத்து: மருத்துவ உலகம் எச்சரிக்கை

Prathees
2 years ago
ஞாபக சக்தியை படிப்படியாக இழக்கும் ஆபத்து: மருத்துவ உலகம் எச்சரிக்கை

ஞாபக சக்தியை படிப்படியாக இழக்கும் ஆபத்து பல மடங்கு உலகளவில் அதிகரிக்கும் எச்சரிக்கையை மருத்துவ உலகம் விடுத்துள்ளது. 

2019 ம் ஆண்டில்  57 மில்லியன் தொகை கொண்ட DEMENTIA எனும் மறதி நோய்  நோயாளரின் எண்ணிக்கை  2053 ம் ஆண்டளவில் 75 % அதாவது 3 மடங்கு  153 மில்லியனாக அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

உலக ரீதியாக 195 நாடுகளில் 40 வயது அதற்கு மேற்பட்ட வயதினருக்கிடையில்  நடாத்தப்பட்ட ஆய்வில் பல காரணங்கள்  இந்த நோய் தொடர்பான எச்சரிக்கை விடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. 

நிறை அதிகரிப்பு, உயர்ந்த சர்க்கரை அளவு, புகைப்பிடித்தல் போன்ற முக்கிய காரணங்களுடன்  CHOLESTEROL  எ‌ன்று‌கூறக்கூடிய கூடிய கொழுப்பு விகிதம் , 40 வயதில் ஆரம்பமாகிறது எனவும் இதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், இந்த ஞாபகசக்தியை இழக்கும் நோயில் ஆண்களை விடவும் பெண்களே கூடியளவு பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அந்த , புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு பதிலை திரும்ப திரும்ப வினவுதல், பணத்தை சரிவர கணக்கிடுதலில் தவறு விடுதல், ஒருவரை அடையாளம் காண்பதில் திக்குமுக்காடுதல் போன்ற அசாதாரண அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் விரைவான சிகிச்சைக்கு செல்வது நல்லதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

வாழ்க்கை நடைமுறையில் ( Lifestyle) மாற்றத்தை கொண்டு வருதல் மூலம் (உதாரணமாக உணவு, உடற்பயிற்சி, மது மற்றும் புகைத்தல் பழக்க வழக்கம் ) ஒருவரின் ஞாபகசக்தி இழக்கும் சமிக்ஞையை தணிக்க முடியுமென மருத்துவ ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.