வாலிப வயதில் பெண்களுக்கேற்படும் பருவ கோளாறு.
#Health
#Young
#Age
Mugunthan Mugunthan
2 years ago
பிம்பிள்ஸ் என்பது உடலில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாவதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படுகிறது. பொதுவாக 13 வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலேயே எண்ணெய் சுரப்பிகளின் வேலை அதிகமாகும். இதனால் பருக்கள் அதிகம் தோன்றும்.
இதையே நம்மவர்கள் பருவக் கோளாறு என்று பேச்சு வழக்கில் சொல்கின்றனர். ஆனால், தற்போதைய அவசர வாழ்க்கை முறை, அதிக சுற்றுச்சூழல் மாசு காரணமாக பருவானது எந்த வயதினரையும் விட்டு வைப்பதில்லை.
- ஹார்மோன் மாற்றங்களால் பருக்கள் ஏற்படுவதற்கு நாம் ஒன்றும் செய்ய தேவையில்லை. எண்ணெய் சுரப்பிகளுக்கு முறையான க்ளென்சர் மற்றும் ஏற்ற ஆயில் கன்ட்ரோல் ஃபேஸ்வாஷ், க்ரீம்களை பயன்படுத்தினாலே போதும். இதன்மூலமே எண்ணெய் சுரப்பிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
- பருக்கள் அதிகமாகும்போது அதற்குண்டான ஆன்டிபயாடிக், ஆன்டிசெப்டிக் போன்றவை தேவைப்படும். இல்லாவிட்டால் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. சிகிச்சை அவசியம்.
- பிம்பிள்ஸை கிள்ளுவது மிகவும் தவறான பழக்கம். இந்த நடவடிக்கையால் மற்ற இடத்திலும் பிம்பிள்ஸ் பரவ ஆரம்பிக்கும். மேலும் பிம்பிள்ஸை கிள்ளுவதால் அந்த இடத்தில் தழும்போ, பள்ளமோ உண்டாகும் வாய்ப்பும் உண்டு.
- பருக்கள் வராமல் தடுக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை. நேரத்திற்கு உண்பது, உறங்குவது, உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
- சில முகப்பருக்கள் தோன்றி மறைந்து விட்டாலும் அது ஏற்படுத்தக்கூடிய தழும்பு மற்றும் கரும்புள்ளியானது முகத்தோற்றத்தையே கெடுத்து விடும். இதனால் பலர் தன்னம்பிக்கையும் இழக்கிறார்கள். லேஸர் சிகிச்சை உள்பட பல முன்னேற்றங்கள் இன்று சரும நலத்துறையில் ஏற்பட்டுள்ளது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சையை தொடர்ந்தாலே முகப்பரு வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.