புதிய இந்தியாவை நோக்கி பயணிக்கிறோம்-மோடி

Prabha Praneetha
2 years ago
புதிய இந்தியாவை நோக்கி பயணிக்கிறோம்-மோடி

நாம் பாகுபாடுகளுக்கு இடமில்லாத ஓர் அமைப்பை உருவாக்குகிறோம். சமத்துவம் மற்றும் சமூக நீதியின் அடித்தளத்தில் உறுதியாக நிற்கும் ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவில் இருந்து பொன் இந்தியாவை நோக்கி எனும் தேசிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதேபோல பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். கிராமி விருது பெற்ற ரிக்கிகேஜ் 75-வது ஆண்டு பெருவிழாவிற்கு அர்ப்பணித்த பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொன் இந்தியாவுக்கான உணர்வும் உள்ளது. ஆன்மிக பயிற்சியும் இருக்கிறது. இதில் நாட்டிற்கு உத்வேகம் உள்ளது. பிரம்ம குமாரிகளின் முயற்சியும் உள்ளது.

நமது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளது. தேசம் நம்மிடம் இருந்து இருக்கிறது. நாம் தேசத்தில் இருக்கிறோம். இந்த உணர்வு புதிய இந்தியாவை உருவாக்குவதில் நமக்கு மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது. புதிய இந்தியாவை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்.

இன்று நாம் பாகுபாடுகளுக்கு இடமில்லாத ஓர் அமைப்பை உருவாக்குகிறோம். சமத்துவம் மற்றும் சமூக நீதியின் அடித்தளத்தில் உறுதியாக நிற்கும் ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம்.

சிந்தனையும், அணுகுமுறையும் புதுமையானவை. முற்போக்கான முடிவுகள் கொண்ட இந்தியா உருவாவதை நாங்கள் காண்கிறோம்.

நமது ஆன்மிகம், பண்முகத் தன்மை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் தொழில்நுட்பம், உள் கட்டமைப்பு, கல்வி, சுகா தாரம் ஆகியவை தொடர்ந்து நவீன மயமாக்கப்பட வேண் டும்.

கடந்த 75 ஆண்டுகளில் உரிமைகள், உரிமைகளுக்காக போராடுவது, நேரத்தை வீணடிப்பது என்று மட்டுமே பேசினோம். ஒருவரின் கடமைகளை முழுவதுமாக மறப்பது இந்தியாவை பலவீனமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

சுதந்திரம் அடைந்த 75 வருடங்களில் நம் சமூகத்தில், நம் தேசத்தில் ஒரு தீமை அனைவரையும் சூழ்ந்துள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகன் இதயத்திலும், நாம் அனைவரும் தீபம் ஏற்ற வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து கடமையின் பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம். அப்போது சமூகத்தில் நிலவும் தீமைகள் அகற்றப்பட்டு, நாடும் புதிய உச்சத்தை எட்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!