நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா....?
நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்து, எலும்புகளை உறுதியாக்கும். கல்லீரலில் இருக்கும் கிருமிகளை அழித்து நலம் பயக்கக்கூடியது.நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கிறது
வாரம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் பளப்பான சருமத்துடன் முகமும் பொலிவுடன் இருக்கும். இது செல்களை புத்துணர்வு பெறவைத்து, ரத்த ஓட்டத்தை தூண்டிவிடுவதால் தோலில் சிருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளமையுடன் இருக்க உதவுகின்றது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. நெல்லிக்காய் வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
நெல்லிக்காய் பொடியை தயிருடன் கலந்து தலையின் ஸ்கால்பில் தடவி வந்தால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். பொடுகுத் தொல்லையும் நீங்கும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்சர் நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தி விடலாம்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும், சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் ஜாம் என பலவிதமாக நாம் சாப்பிட்டு வருவதால் உடல் ஆரோக்கியம் பெருகும்.