காபி பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட்நியூஸ்!

#Health
Nila
2 years ago
காபி பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட்நியூஸ்!

காலையில் எழுந்தவுடன், காபி அருந்தினால் மட்டுமே பலரும் உற்சாகமாக தனது வாழ்கை பயணத்தை துவங்குவார்கள். அதுமட்டுமின்றி, இன்னும் பலர் காலையில் காபி குடித்தால் மட்டுமே காலைகடன்  தீரும், என்ற நிலையில் இருப்பர். அவ்வாறு, நம்முடைய வாழ்வில் ஒன்றென கலந்த காபி, தவிர்க்க முடியாத பானமாக தற்போது இடம் பெற்றுள்ளது. அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து பரவலாக நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பொய்யாக்கும் விதமாக, லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவு வெளிவந்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர். இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை. இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரியவந்துள்ளது. 

மேலும் குறைந்த அளவு காபி குடிப்பவர்களுடன் அதிக காபி குடிப்பவர்களை ஒப்பிடும்போது, அவர்களுக்கு புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயம் 9 சதவீதமாகக் குறைகிறது. உதாரணமாக ஒருநாளைக்கு ஒரு கப் காபி குடித்தால் 1 சதவீத அபாயம் குறையும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். காபி குடிப்பதால் கல்லீரல், குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களின் ஆபத்தும் குறையும். 

கல்லீரலை பாதுகாக்கிறது:

காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சில குறிப்பிட்ட நோய்களின் பாதிப்பு குறைகிறது. குறிப்பாக ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரையும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதையும் குறைக்கிறது. காபியானது நமது மூளையின் செயல்பாடுகளான நினைவாற்றல், சீரான மனநிலை, எச்சரிக்கை தன்மை ஆகியவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு கல்லீரலையும் பாதுகாக்கிறது.

எடை குறைய உதவுகிறது:

பால் மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாத காபியை நாம் பருகும்போது இரண்டாவது வகை நீரழிவு நோய் வருவது குறைகிறது. காபி பருகுவதால் மன அழுத்தம் குறைவதோடு, தொடர்ச்சியாக குடிக்கும்போது கீழ்வாதம் ஏற்படும் அபாயம் குறைவதும் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் காஃபின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி கொழுப்பை வேகமாக எரிக்கிறது. இதன்மூலம் உடல் எடையானது குறைகிறது. குறிப்பாக பால் கலக்காத காபியில் எலுமிச்சை கலந்து குடிப்பதன் மூலம் உடலில் கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறைகிறது.

 நோயெதிர்ப்பு ஆற்றல்:

காபியில் உள்ள காபின் ரத்தத்தில் கலக்கும்போது அட்ரீனலின் அளவு அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.காபி குடிப்பதால் பார்கின்சன் நோய் ஏற்படும் ஆபத்து 25 முதல் 30 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடுகின்றன. இந்த செய்தியால், உலகில் உள்ள காபி பிரியர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!