வாழ்க்கை நம்மை பாரபட்சத்துடன் நடத்தினாலும் தான் என்ன?

Keerthi
2 years ago
வாழ்க்கை நம்மை பாரபட்சத்துடன் நடத்தினாலும் தான் என்ன?

இவர் ஜிம் தார்ப். புகைப்படத்தை நெருக்கமாக பாருங்கள். அவர் இரண்டு கால்களிலும் வேறு வேறான சாக்ஸும் ஷூக்களும் அணிந்திருப்பதை பார்க்கிறோம். 
அது 1912ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் சமயம். ஓக்லஹாமா மாகாணத்திலிருந்து தட களப் போட்டிகளில் அமெரிக்கா சார்பாக ஜிம் வந்திருந்தார். போட்டி நடைபெறும் நாள் காலையில் அவருடைய ஷூக்கள் திருடு போய்விட்டன. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு குப்பைத் தொட்டியில் ஜிம் இரண்டு ஷூக்களை கண்டெடுத்தார். 

அந்த ஷூக்களைத் தான் இந்த புகைப்படத்தில் ஜிம் அணிந்திருக்கிறார். ஆனால் அதில் ஒரு ஷூ மிகவும் பெரிதாக இருந்ததால் அவர் அந்த காலில் ஒரு எக்ஸ்ட்ரா சாக்ஸ் அணிந்து சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த ஷூக்களை அணிந்து கொண்டு ஜிம் அன்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.
நாம் நம்மை பின்னால் தள்ளும் சாக்குப் போக்குகளின் பின்னால் ஒளிந்துகொள்ளாமல் நம் கடமையில் ஈடுபட வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.