இன்று பிப்ரவரி,4 உலக புற்றுநோய் தினமாக, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.
உலக புற்றுநோய் தினம் இன்று 4-2-2022
இன்று பிப்ரவரி,4 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
தற்போது நம்மை பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அனுமவிக்கும் வலி எத்னினும் ஒப்பிடமுடியாதொன்று, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம்.
இதை கண்டு உண்மையில் நாம், புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை.
குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என இந்த நோயாளிகள் நினைக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் அக்கரை பரிதாபமாக மாறிவிட கூடாது. அந்த அனுதாபம் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடக்கூடாது.
அதற்கு பதில் அவர்களை உற்சாக படுத்துங்கள். சக மனிதராக அவர்களை பார்க்க பழகுங்கள். உலகின் புற்றுநோயாளிகளில் 47% வீதம் பேர் வளரும் நாடுகளிலே இருக்கின்றனர். இதில் 55% வீதமானோர் குறுகிய காலத்தில் உயிரிழக்கின்றனர்.
இதில் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் வள்ர்ந்து நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது.
மதுபழக்கம், புகைப்பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இப்படி எதுவுமே புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வின் தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது.
இதனை கருத்தில் கொள்வதை மட்டும் விட்டுவிடாது, இன்றைய புற்றுநோய் தினத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய நான்கு நம்பிக்கைகளும், உண்மைகளும் .
நம்பிகை 1.
புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விடயம் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.
நம்பிக்கை 2.
புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோய் என்பது உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் அது தாக்குகிறது.
நம்பிக்கை 3.
புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.
நம்பிக்கை 4.
புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான்.
எனவே இவற்றை கருத்தில் கொள்ளுங்கள். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடுங்கள். உங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்துங்கள். ஆரோகியமாக வாழ்வதை வாழ்நாள் பழக்கமாக கொள்ளுங்கள். அதையே மனித நாகரீகம் என்று உணருங்கள், அதுவே உண்மையான கலாச்சார வளர்ச்சியாக பாருங்கள்.