தற்போது சந்தைகளில் அதிகளவில் கிடைக்கும் வெங்காயத்தாளில் இத்தனை விஷயமா?
#Health
#Vegetable
#Benefits
Mugunthan Mugunthan
2 years ago
பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் வெங்காயத்தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது பலாண்டு(Palandu) என குறிப்பிடப்படுகிறது.
- ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு பலவிதமான பிரச்னைகளைக் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. ரத்தம் இறுகிப் போவதைத் தடுத்து அதனை நீர்த்துப் போக செய்கிறது.
- ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதில், கந்தகச் சத்து ஏராளமாக இருப்பதால் சருமம் தொடர்பான நோய்கள் வராது.
- ஜீரண சக்தியை அதிகரித்து நரம்பு செல்களைப் பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன் வளர்க்க உதவும்.
- மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் இதனால் சரி செய்யப்படுகிறது. பக்கவாதம் ஏற்படுவதையும் வெங்காயத்தாள் தடுக்கிறது.
- வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90%குறையும்.
- காய்ச்சலைக் குணப் படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
- காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம்.
- வெங்காயத் தாளினை கூட்டாகவோ, சூப்பாகவோ, சட்னியாகவோ பல விதங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.