தேர்தலை முன்னிட்டு பெப். 17 முதல் 19 வரை மதுபானம் விற்பனை செய்ய தடை

Prasu
2 years ago
தேர்தலை முன்னிட்டு பெப். 17 முதல் 19 வரை மதுபானம்  விற்பனை செய்ய தடை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் பெப். 17 முதல் பெப். 19 ஆம் திகதி வரையிலும், பெப். 22 ஆம் திகதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனால், வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் பெப்ரவரி 17 ஆம் திகதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், அதற்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில் பெப்ரவரி 22 ஆம் திகதியும் மதுக் கூடங்கள், மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும்.

அந்த நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்வதோ, மதுக்கூடங்களை திறப்பதோ அல்லது அவற்றை தோ்தல் நடைபெறும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!