‘செல்லப்பிராணி வளர்ப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனநலம், உடல்நலம், சமூகநலம் என மூன்றையுமே காக்க அது அழகான ஒரு வழி’.
‘செல்லப்பிராணி வளர்ப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனநலம், உடல்நலம், சமூகநலம் என மூன்றையுமே காக்க அது அழகான ஒரு வழி’
என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களிடம் இயல்பாக உள்ள அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் பழக்கம் பெரிய தூண்டுகோலாக அமைகிறது.
செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம், குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. செல்லப்பிராணியுடன் நேரம் செலவழிப்பது மிகப்பெரிய மன அழுத்த நிவாரணியாக இருக்கிறது. இந்தியாவில் 20 நபர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய Bangalore national institute of mental health நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 2015-ம் ஆண்டைக்காட்டிலும் 2016-ம் ஆண்டு 14 சதவிகிதம் பேர் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ‘செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுபடலாம்’ என்பதை ஆராய்ச்சி நடத்தியே நிரூபித்துள்ளனர். ‘செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும்போது அவை நிபந்தனையற்ற அன்பைத் தருவதால் மனநோயாளிகளுக்கு உடனடியான மன அமைதி கிடைக்கிறது’ என்று ஆராய்ச்சிக்குழுவின் முதன்மை ஆய்வாளரான ஹெலன் ப்ரூக்ஸ் கூறியிருக்கிறார்.