அதிக உடல் உளைச்சல் காரணமாக பெண்களுக்கேற்படும் ஹைபர் புரோலாக்டிமியா.
மாதவிலக்கு வராமல் அவதிப்படுபவர்கள் 20 சதவீதத்தினருக்கும் , மாதவிலக்கு ஒழுங்கீனங்கள் உள்ள 10 சதவீதப் பெண்களுக்கும் , அந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகாச் சுரப்பது தான். இவர்களில், மூன்றில் ஒருவருக்கு மார்பகத்தில் இருந்து பால் போன்ற திரவக் கசிவும் , இன்னொரு மூன்றில் ஒரு பங்கினருக்கு, பிட்யூட்டரி புற்றுக் கட்டிகளும் இருக்கும். இவை துவக்க நிலையில் இருந்தால் , மருந்துச் சிகிச்சைக்கு கட்டுப்படும். பிட்யூட்டரியும் சரியாக இயங்கும்.
கடின உடற்பயிற்சி, மன இறுக்கம், பால் ஊட்டுதல்அதிக மன இறுக்கம் அல்லது உடற்பயிற்சியால் புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். தவிர, குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டும்போது, புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால்தான் , குழந்தைக்கு நன்றாகப் பாலூட்டும் தாய்க்குக் கர்ப்பம் ஏற்படுவதில்லை. குழந்தைக்கு பாலூட்டுவதைத் தவிர்த்தால், புரோலாக்டின் ஹார்மோன் குறையும். இவ்வாறே , மனா இறுக்கமான சூழலை மாற்றினால், புரோலாக்டின் குறைந்து கரு முட்டை வெளியாகும். கர்ப்பமும் உண்டாகும்.