ஞாயிற்றுக்கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான். வணங்கிப்பாருங்கள். அப்போது அந்த உண்மை விளங்கும்.

Keerthi
2 years ago
ஞாயிற்றுக்கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான். வணங்கிப்பாருங்கள். அப்போது அந்த உண்மை விளங்கும்.

ஞாயிறு என்றால் சூரியன் என்று பொருள். பொதுவாக சூரிய பகவானே நவகிரகங்களின் முதன்மைக் கடவுளாக விளங்குகிறார். 
அப்பேர்பட்ட சூரியபகவானை வணங்குவதற்குரிய கிழமையாக ஞாயிற்றுக்கிழமை பார்க்கப்படுகிறது.சூரியனை எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்று பார்த்தால் ஞாயிறு தோறும் அதிகாலை வேளையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் சரியாக சூரிய உதயத்திற்கு முன் தோன்றும் காலை பொழுதில்  பூஜை அறையில் தீபம் ஏற்றி செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்குப் பின்பு அந்த நீரை கைகளில் ஏந்தி சூரியனைப் பார்த்து "சூரிய நாராயணாய நமஹ" என்று பதினோரு முறை மனதார நினைத்து வணங்கிய பின்பு செம்பு பாத்திரத்தில் வைத்திருந்த நீரை தோட்டத்தில் இருக்கும் செடிகளில் ஊற்றி விடவும். இவ்வாறு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவானை வழிபடும்போது சூரிய கதிர்கள் நம் மீது நேரடியாக விழுவதால் நமக்கு நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். அது மட்டுமின்றி வீட்டில் மகிழ்ச்சி தங்கும்,பொருளாதார நிலை மேலோங்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!